வெற்றிலை  செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பல சரும பிரச்சனைகளுக்கும், உடல் நல பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது என்பதை பலரும் அறியாத விஷயமாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுவும் குறிப்பாக, வெற்றிலையின் பயன்பாடு அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக அமையும். இது சருமத்தில் உள்ள தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது. வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. வெற்றிலை நீரால் முகத்தை சுத்தம் செய்வதன் மூலமும் பல வகையான அலர்ஜிகள் குணமாகும். இது தோல் எரிச்சல், வலி ​​மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும்.


ALSO READ | செலவில்லாமல் ஒரு ‘Gold Facial’; பாதாம் எண்ணெய் செய்யும் அற்புதங்கள்..!!


வெற்றிலையை பயன்படுத்தும் முறைகள்


1. வெற்றிலையை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து தடவவும். இந்த பேஸ்ட்டை  சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் 2 நிமிடம் வைத்திருந்த பிறகு, குளிர்ந்த நீரில் சருமத்தை சுத்தம் செய்யவும்.


2. ஒரு கைப்பிடி வெற்றிலையை அரைத்து பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது நன்கு தடவவும். பின் 5 நிமிடம் கழித்து சாதாரண நீரில் முகத்தை கழுவவும். இது சருமத்திற்கு பொலிவை தரும்.


3. வெற்றிலையை வேகவைத்து அதன் நீரால் முகத்தைக் கழுவுவதும் பலன் தரும்.


4. வெற்றிலைப் பொடி, முல்தானி மிட்டி, கடலை மாவு, ரோஸ் வாட்டர் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழிந்த பின் சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவவும்.


வெற்றிலையை பயன்படுத்துவதாக கிடைக்கும் நன்மைகள்


கரும்புள்ளிகள் நீங்கும்


சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் வெற்றிலையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும்


சருமத்தை பொலிவுறச் செய்யும் தன்மை உள்ளது. 


ஒவ்வாமை மற்றும் தடிப்புகள்


வெற்றிலையின் பயன்பாடு தோல் தொற்று மற்றும் ஒவ்வாமை பிரச்சனையிலும் உங்களுக்கு நன்மை பயக்கும். இதில் உள்ள ஆண்டிசெப்டிக் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் சரும அலர்ஜியை குணப்படுத்துகிறது.


ALSO READ | Weight loss Yoga: தொப்பை குறைய ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்..!!!


அழற்சி பிரச்சனை


வெற்றிலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அழற்சி பிரச்சனையை குறைக்கிறது.


வயதான அறிகுறிகளை நீக்குகிறது


நீங்கள் வயதாகும்போது, ​​உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை குறைகிறது. வெற்றிலையை பயன்படுத்துவதால் முதுமையின் அறிகுறிகள் நீங்கும்.


அரிப்பு மற்றும் சரும எரிச்சல் 


அரிப்பு மற்றும் சரும எரிச்சல் பிரச்சனையில், வெற்றிலையை உபயோகிப்பது பலன் தரும். அரிப்பு மற்றும் வலி பிரச்சனையிலும் நிவாரணம் தரும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு பிரச்சனையை நீக்குகிறது. உங்களுக்கு சென்சிஸிடிவ் சருமம் இருந்தால்,  வெற்றிலையை ஏதேனும் ஓர் இடத்தில் தடவி பரிசோதித்த பின்னரே  சருமத்தில் முழுமையாக பயன்படுத்தவும்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | Radish: BP முதல் மஞ்சள் காமாலை வரை; பல வித நோய்களுக்கு அருமருந்தாகும் முள்ளங்கி! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR