புதுடெல்லி: இந்தியாவில் பண்டிகைக்காலம் கோலாகலமாக தொடங்கிவிட்டது. நவராத்திரி கொண்டாட்டங்களுடன் தீபாவளி திருவிழாவும் தொடங்கிவிட்டது. இதை முன்னிட்டு சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'அடுத்த மூன்று மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்' என மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால், எச்சரிக்கை அறிவிக்கையை வெளியிட்டுள்ளார்.


"துர்கா பூஜை மற்றும் தசரா போன்ற பண்டிகைகளில் மெய்நிகராக (virtually) கலந்து கொள்ளுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களை தீபாவளியன்று ஆன்லைனில் சந்தியுங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


Also Read | Covid Toe: கோவிட் டோ என்றால் என்ன? வந்தால் சிகிச்சை என்ன?


பண்டிகை காலத்தை முன்னிட்டு, அக்டோபர் முதல் டிசம்பர் வரை கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா நேற்றுத் தொடங்கியது. இந்துக்களின் மிகவும் முக்கியமான இந்த விழாவுடன் பண்டிகைக் காலம் தொடங்குகிறது. ஊடகங்களுக்கு பேட்டியளித்த சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லவ் அகர்வால், துர்கா பூஜை, விஜதசமி பூஜைகளை விர்ச்சுவலாக பாருங்கள். தீபாவளியன்று ஆன்லைனில் உங்கள் உற்றார் உறவினர்களை சந்தியுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.


அதுமட்டுமல்ல, "முகக் கவசம் மிகவும் முக்கியமானது. தடுப்பூசி மிகப் பெரிய கவசம். இவை இரண்டும், பண்டிகை மற்றும் திருமண காலங்களில் நாம் எதிர்கொள்ளும் தொற்று அச்சத்துக்கு எதிராக ஆக்கப்பூர்வ பங்களிக்கின்றன" என சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லவ் அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.


READ ALSO | அக்டோபர் 6; 1432 பேருக்கு கொரோனா பாதிப்பு, 25 பேர் பலி


கடந்த சில மாதங்களாக கோவிட் -19 நெருக்கடியை இந்தியா எவ்வாறு வெற்றிகரமாக கையாண்டு வருகிறது என்றும் கூறிய அவர், "கோவிட் சவால் இன்னும் முடிவடையவில்லை. கோவிட் இரண்டாவது அலை போதுமான அளவிற்கு கட்டுப்படுத்தவில்லை, அதற்கு தொடர்ந்து முயற்சிகள் செய்ய வேண்டும்," என்று லவ் அகர்வால் கூறினார்.


இந்தியாவில் இதுவரை 3.39 கோடி கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளது. 2.44 லட்சம் பேருக்கு தற்போது கொரோனா தொற்று உள்ளது. தற்போது செயலில் உள்ளன. அவர் கூறினார், "நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா விகிதம் 1.68% ஆக இருந்தது, அதற்கு முந்தைய வாரத்தில் 5.86% என்ற நிலையில் இருந்த்து".


இந்தியாவின் கோவிட் வீரர்கள், மருத்துவ சமூகம் மற்றும் விஞ்ஞானிகளுக்கு நன்றி. இந்தியா, இந்த நூற்றாண்டில் உலகின் மிக கொடிய தொற்றுநோயை மிகுந்த தைரியத்துடன் போராடியது. தடுப்பூசி போடுவதில் இந்தியா செய்த முன்னேற்றம் பெருமை சேர்க்கும் ஒன்று என பிரதமர் நேற்று குறிப்பிட்டிருந்தார்.


ALSO READ | ஆண்களின் ஆரோக்கியத்திற்கான ‘சூப்பர்’ உணவுகள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR