Superfoods For Men's Health: இந்த பரபரப்பான வாழ்க்கையில், பெரும்பாலான ஆண்கள் தங்கள் உனவு பழக்கம் மீது விசேஷ கவனம் செலுத்துவதில்லை. அதனால் அவர்கள் பலவீனமாக உணர்வதோடு, பல விதமான பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. தங்கள் பலவீனத்தை போக்க, ஆண்களுக்கு சில சத்துக்கள் தேவை. சில விஷயங்களை ஆண்கள் தினமும் சாப்பிட வேண்டும்.
ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில சூப்பர் புட் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். அவற்றை சாப்பிடுவதன் மூலம், ஆண்களின் அன்றாட பிரச்சனைகள் தீரும். இதுமட்டுமின்றி, அவற்றை உட்கொள்வதன் மூலம், ஆண்களின் உடல் பலவீனத்தை போக்குவதோடு, அவர்களில் பாலியல் தொடர்பாக பிரச்சனைகளும் தீர்கிறது.
ஆண்களுக்கு மிகவும் பயனளிக்கும் சூப்பர் உணவுகள்
முழு தானியங்கள்
ஆண்கள் தினமும் முழு தானியங்களை சாப்பிட வேண்டும். முழு தானியங்கள் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். முழு தானியங்களை சாப்பிடுவது உடலில் ஆற்றலை தக்க வைத்து கொள்ள உதவுகிறது.
ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!
ஓட்ஸ்
ஓட்ஸ் சாப்பிடுவதால், உடலுக்கு புரதத்துடன் சக்தியும் கிடைக்கும். இது உடலின் எலும்புகளையும் பலப்படுத்துகிறது. இது ஆண்களின் உடல் பலவீனத்தை அகற்ற பெரிதும் உதவுகிறது.
கீரை
கீரை உடலில் இரத்த ஓட்டத்தை சரி செய்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது ஆண்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது. கீரையை காய்கறி போல் சமைத்து சாப்பிட விரும்பாதவர்கள், அதை புரத ஷேக் அல்லது ஸ்மூதி போல் தயாரித்து குடிக்கலாம்.
ALSO READ | அழகான கேசத்திற்கான Keratine சிகிச்சை; அதிக செலவில்லை, பழைய சாதம் போதும்
பாதம் பருப்பு
ஆண்கள் தினமும் பாதாம் சாப்பிட வேண்டும். பாதாமில் மெக்னீசியம் அதிகம் காணப்படுகிறது. மெக்னீசியம் சாதாரண தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. பாதாம் உடலுக்கு ஆற்றலையும் தருகிறது. இதயம் மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கும் இது அவசியம்.
தயிர்
தயிரில் கால்சியம் அதிகம் இருப்பதால் இது எலும்புகளை வலுவாக்குகிறது. தயிரில் சர்க்கரைக்குப் பதிலாக சில நறுக்கிய பழங்களை சேர்த்து சாப்பிடலாம். இது உடலுக்கு அதிக சத்துக்களை கொடுக்கும்.
தக்காளி
தக்காளி லைகோபீனின் முக்கிய ஆதாரமாகும். லைகோபீன் என்பது ஆக்ஸிஜனேற்றியாகும். இது புரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து ஆண்களைப் பாதுகாக்கிறது. ஆண்களில் புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. எனவே, தக்காளியை ஆண் உணவில் கட்டாயம் சேர்க்கவும்.
ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR