கெட்ட கொழுப்பு உடலில் அதிகமானால்... உங்கள் நகங்கள் `இப்படி` மாறும் - உடனே கவனியுங்க!
High Cholestrol Symptoms: கொலஸ்ட்ரால் அதிகமானால் பல உடல் உறுப்புகள் பாதிப்படையும், அதிலும் உங்கள் விரல் நகங்களும் மாற்றமடையும். விரல் நகங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகியிருக்க வாய்ப்புள்ளது.
High Cholestrol Symptoms: உடல் ஆரோக்கியத்தை பேணுவது என்பது மிக முக்கியமானது. ஆரோக்கியத்தில் மட்டும் அலட்சியம் காண்பித்தால் வருங்காலத்தில் பெரிய உடல்நல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷயத்தை செய்யாமல் இருப்பது எவ்வளவு முக்கியமோ, உடல்நிலை சற்று மோசமானாலும் மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெறுவதும் முக்கியம். வீட்டு வைத்தியம் ஆகியவற்றை விட மருத்துவர்களிடம் செல்வதே முக்கியமானது.
எனவே, காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றை கூட அலட்சியப்படுத்த வேண்டாம் என்பதே மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது. உங்கள் உடலில் ஏதாவது பிரச்னை என்றால், உடலே சில அறிகுறிகளை உங்களுக்கு காட்டிவிடும். அதனால், அதுபோன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், விரைந்து அதற்கான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டால் பிரச்னை தீவிரமடையாமல் தவிர்க்கலாம். எனவே, உடல்நிலையில் சிற்சில மாற்றங்கள் தெரிந்தாலும் மருத்துவரை அணுகுவது நல்லது.
அறிகுறிகளை கவனியுங்கள்...
அந்த வகையில், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் ஆகிய உடல்நல பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது அதிக கொலஸ்ட்ரால் ஆகும். அதுவும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால் உடல்நலப் பிரச்னைகள் வரும். உடலில் கொலஸ்ட்ரால் அளவை கண்டறிய Lipid Profile பரிசோதனை உள்ளது. அதுமட்டுமின்றி கொலஸ்ட்ரால் அதிகமானால் வேறு சில அறிகுறிகளும் உங்களுக்கு உணர்த்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும் படிக்க | மசாலாக்களில் ரசாயன கலப்பு... புற்றுநோய் அபாயம் குறித்து FSSAI எச்சரிக்கை..!!
அதாவது, கொலஸ்ட்ரால் அதிகமானால் பல உடல் உறுப்புகள் பாதிப்படையும். அதிலும் உங்கள் விரல் நகங்களும் மாற்றமடையும். விரல் நகங்களில் பின்வரும் இந்த மாற்றங்களை கவனித்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாகியிருக்க வாய்ப்புள்ளது.
5 அறிகுறிகள்
- நகம் மஞ்சளாவது: உங்களின் நகங்கள் மஞ்சள் நிறத்தில் மாற்றமடைந்தால் அதை கவனிக்க வேண்டும். இது அதிக கொலஸ்ட்ரால் உள்ளது என்பதற்கான பொதுவான அறிகுறியாகும். கொலஸ்ட்ரால் படிவதால் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படலாம். இதனால் நகங்களின் நிறம் மாற்றமடையலாம்.
- நகங்களின் புள்ளிகள்: உங்கள் நகங்களில் வெள்ளை புள்ளிகள் தென்பட்டால் அதுவும் முக்கிய அறிகுறியாகும். இந்த புள்ளிகள் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகபடியாக படிந்திருப்பதை குறிக்கிறது. எனவே இது அதிக கொழுப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
- நகங்கள் பலவீனமாதல்: உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் உங்களின் நகங்கள் பலவீனமாக மாறும், அதாவது எளிதாக உடைந்துவிடும்.
- நகங்கள் தடிமன் ஆவது: அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் நகங்கள் தடிமனாக கா்ணப்படும். அதிக கெட்ட கொழுப்பு சேர்வது நகங்களின் அமைப்பை மாற்றும். அதனை கடினமாகவும், தடினமாகவும் மாற்றும்.
- மெதுவாக வளரும்: இயல்பான காலத்தை விட உங்களுக்கு நகங்கள் மிக மெதுவாக வளர்வதும் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதன் அறிகுறிதான். ரத்த ஓட்டத்தை கொல்ஸ்டரால் தடை செய்வதால் அவை பலவீனமாகி, வளர்ச்சியின் வேகம் குறையும்.
இதனை செய்யுங்க
இதுபோன்ற அதிகப்படியான கொல்ஸ்ட்ராலை குறைக்க பழக்கவழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் உள்ளிட்ட ஃபைபர்கள் கொண்டு உணவுவகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், மது குடிப்பது, புகைப் பிடிப்பது ஆகிய பழக்கவழக்கங்களை கைவிடுங்கள். கொலஸ்ட்ரால் அளவை அடிக்கடி பரிசோதிப்பதும் உங்களை விழிப்புடன் வைத்திருக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: அன்பு வாசகரே, இந்த தகவல் அனைத்தும் உங்களின் புரிதலுக்காக பொது தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறுவது மிக முக்கியமாகும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | கோடை காலத்தில் நீரிழிவு நோயாளிகள் தவறாமல் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ