புதுடில்லி: ஒரு பெரிய மருத்துவ முன்னேற்றத்தில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) நிமோனியாவுக்கு எதிரான முதல் உள்நாட்டு தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பு மருந்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனால் வெளியிடப்பட்டு அடுத்த வாரம் தொடக்கத்தில் உள்நாட்டு சந்தையில் கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதாரங்களின்படி, இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மருந்துகளை விட இந்த தடுப்பூசி மிகவும் மலிவு விலையில் இருக்கும். புனேவை தளமாகக் கொண்ட நிறுவனம் சமர்ப்பித்த ஒன்றாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை தரவுகளை பரிசீலித்த பின்னர், ஜூலை மாதம் இந்தியாவின் ட்ரக் ரெகுலேட்டர் அமைப்பு, நியூமோகாக்கல் பாலிசாக்கரைடு கான்ஜுகேட் தடுப்பூசிக்கு சந்தை உபயோகத்துக்கான ஒப்புதலை அளித்தது.


இந்த தடுப்பூசி (Vaccine) குழந்தைகளுக்கு "ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா" காரணமாக ஏற்படும் ஆக்கிரமிப்பு நோய் மற்றும் நிமோனியாவுக்கு எதிரான செயலில் நோய்த்தடுப்புக்கு பயன்படுத்தப்படுகிறது என்று சுகாதார அமைச்சகம் முன்பு கூறியது.


சீரம் நிறுவனம் இந்தியா (India) மற்றும் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் தடுப்பூசியின் ஒன்றாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை நடத்தியுள்ளது. "இது நிமோனியாவைப் பொறுத்தவரை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசி" என்று அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்தது.


Pfizer (என்.ஒய்.எஸ்.இ: பி.எஃப்.இ) மற்றும் கிளாக்சோஸ்மித்க்லைன் (எல்.எஸ்.இ: ஜி.எஸ்.கே) தயாரிக்கும் மருந்துகளை விட இந்த தடுப்பூசி மிகவும் மலிவு விலையில் இருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


ALSO READ: UK இல் இருந்து சென்னை வந்த 2800 பேருக்கு பரிசோதனை: அச்சப்படத் தேவையில்லை என அறிவுறை


"உலகத்திற்காக 'இந்தியாவில் தயாரிப்பது' (Make in India) மற்றும் உள்ளூர் தயாரிப்புக்களுக்காக குரல் கொடுப்பது (Vocal for local) ஆகிய பிரதமரின் கனவை நிறைவேற்றுவது எப்போதுமே எங்கள் முயற்சியாக இருந்துள்ளது.


"பிரதமரின் தற்சார்ப்பு இந்தியாவிற்கான (Atmanirbhar Bharat) அழைப்பை நோக்கிய பாதையில், இந்தியாவின் முதல் உலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு நிமோகோகல் கான்ஜுகேட் தடுப்பூசியை (பி.சி.வி) உருவாக்கி, இந்திய உரிமத்தைப் பெற்றதன் மூலம் COVID-19 தொற்றுநோயின் லாக்டௌன் காலத்தில் நாம் மேலும் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளோம்" என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (SII) அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் கூடுதல் இயக்குநர், பிரகாஷ் குமார் சிங் எழுதிய ஒரு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


UNICEF தரவுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் நிமோகோகல் நோயால் இறக்கின்றனர். நிமோனியா (Pneumonia) ஒரு சுவாச நோய் என்பதால், நிமோகோகல் கான்ஜுகேட் தடுப்பூசிகள் (பி.சி.வி) உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது தற்போதைய COVID-19 தொற்றுநோய்களின் போது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நாடு தற்போது வெளிநாட்டு உற்பத்தியாளர்களின் இறக்குமதி செய்யப்பட்ட அதிக விலைகொண்ட பி.சி.வி யை சார்ந்துள்ளது. இன்ட்ராமுஸ்குலர் முறையில் நிர்வகிக்கப்படும் இந்த தடுப்பூசி ஜனவரி மாதம் WHO ஆல் அங்கீகரிக்கப்பட்டது.


ALSO READ: தென்னாப்பிரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு வந்த மற்றொரு புதிய கொரோனா, மக்கள் பீதி!


முன்னதாக, அத்தகைய தடுப்பூசியின் தேவை நாட்டில் உரிமம் பெற்ற இறக்குமதியாளர்களால் கணிசமாக பூர்த்தி செய்யப்பட்டது. தடுப்பூசிகளின் உற்பத்தியாளர்கள் அனைவரும் இந்தியாவுக்கு வெளியே இருந்ததால் இந்த நிலை இருந்தது என்று சுகாதார அமைச்சகம் முன்பு கூறியது.


தற்போது நிமோனியாவின் இந்த தடுப்பு மருந்து வெற்றிகரமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்பது உறுதிபடுத்தப் பட்டுள்ளதால், இது இந்திய மருத்துவ துறையைப் பொறுத்த வரை ஒரு மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR