இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை (மியூகோர்மைகோசிஸ்) நோய் மக்களிடையே பெரும் பீதியை கிளப்பி வருகிறது. பல மாநிலங்களில், இதனால் மக்கள் இறந்துள்ளனர். இதன் தீவிரம் காரணமாக பல மாநிலங்கள் இதை ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருப்பு பூஞ்சை (Black Fungus) என்பது பற்கள், கண்கள், மூக்கு, வாய் வழியாக மூளைக்கு பரவக்கூடிய ஒரு பூஞ்சை நோயாகும். கொரோனா சிகிச்சையின் போது சிகிச்சைக்காக ஸ்டெராய்டுகள் வழங்கப்படும் நோயாளுக்கும் அதிக நாட்களுக்கு ஆக்சிஜன் சப்போர்டில் இருந்தவர்களுக்கும் இந்த தொற்று பெரும்பாலும் ஏற்படுகிறது. மேலும், நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கும் கருப்பு பூஞ்சை வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. 


கருப்பு பூஞ்சையின் ஆரம்ப அறிகுறிகளில் வாய்வழி திசு, நாக்கு மற்றும் ஈறு நிறமாற்றம் ஆகியவை அடங்கும். உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, நமது வாயின் சுகாதாரத்தையும் கவனித்துக்கொண்டால் நாம் இந்த நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். நமது வாய் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள சில எளிய உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம். இவற்றின் மூலம் கருப்பு பூஞ்சை நோய்க்கான சாத்தியக்கூறுகளையும் நாம் குறைக்க முடியும்.


ALSO READ: அதிக பாதிப்பை தரக்கூடிய மஞ்சள் பூஞ்சை அறிகுறிகள் என்ன
ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பல் துலக்குங்கள்


COVID-19 சிகிச்சையின் போது பல நோயாளிகளுக்கு ஸ்டெராய்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்டெராய்டுகள் மற்றும் பிற மருந்துகளின் நுகர்வு உங்கள் வாயில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை உருவாவதற்கும் வளர்வதற்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, சைனஸ், நுரையீரல் மற்றும் மூளையில் பல சிக்கலான பிரச்சினைகள் ஏற்படலாம். இதையெல்லாம் தவிர்க்க, ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று முறை பல் துலக்குவது மிகவும் முக்கியமாகும். இப்படி செய்வதால், கருப்பு பூஞ்சையிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.


வாய் கொப்பளித்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்


கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து குணமடைந்த பிறகும், அனைவரும் வாய்ப்பகுதியின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவின் பின் விளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். கருப்பு பூஞ்சை உட்பட அனைத்து விதமான தொற்றுநோயையும் தடுக்க, தொற்றிலிருந்து குணமான அனைவரும் தவறாமல் வாயை அடிக்கடி கொப்பளிக்க வேண்டும். இதற்கு, சந்தையில் கிடைக்கும் ரின்சர் பிராடெக்டுகள், அதாவது கொப்பளிக்கும் திரவ பிராடெக்டுகளை பயன்படுத்தலாம். மேலும், கொரோனா நோயாளிகளின் (COVID Patients) பரிசோதனை முடிவு நெகடிவ் என வந்த பிறகு, அதாவது தொற்றிலிருந்து குணமானவுடன், அவர்கள் தங்கள் வாய் துலக்கும் பிரஷ்ஷை மாற்றுவது மிக முக்கியமாகும். 


பிரஷ்கள் மற்றும் டங் கிளீனர்களை கிருமி நீக்கம் செய்யுங்கள்


நிபுணர்களின் கூற்றுப்படி, கோவிட்டிலிருந்து மீண்ட ஒருவர் தனது பிரஷ்ஷை வீட்டில் மற்றவர்களின் பிரஷ்ஷுடன் ஒரே இடத்தில் வைத்திருக்கக் கூடாது. அப்படி வைப்பதால், அது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் ஆபத்தாக அமையலாம். உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினரின் வாய்ப்பகுதியின் சுகாதாரத்திற்கு இது மிகவும் முக்கியமானதாகும். மேலும், ஆண்டிசெப்டிக் மவுத்வாஷைப் பயன்படுத்தி, உங்கள் பல் துலக்கும் பிரஷ் மற்றும் டங் கிளீனரை சுத்தப்படுத்துமாறும் நிபுணர்கள் அறிவுறை கூறுகிறார்கள்.


ALSO READ: படுத்தி எடுக்கும் பூஞ்சைகள், கருப்பு, வெள்ளையை தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR