இந்தியா முழுவதும் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொரோனாவிலிருந்து (Coronavirus) மீண்டு வருபவர்களை கருப்பு பூஞ்சை (Black Fungus) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வெளியாகின. இந்த கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த புதிய வகை வைரஸ் காரணமாக தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உயர்பலிகளும் நிகழ்ந்துள்ளது.
ALSO READ | COVID-19: கருப்பு பூஞ்சையை அடுத்து பீதியை கிளப்பும் வெள்ளை பூஞ்சை
மறுபுறம் கருப்பு பூஞ்சை தொற்று நோயை விட அதிக ஆபத்தை உண்டாக்கும் வெள்ளை பூஞ்சை (White Fungus) தொற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளி கண்டறியப்பட்டனர். இந்த வெள்ளை பூஞ்சை பீகார், பாட்னாவில் நான்கு பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. மியூக்கோர்மைகோசிஸ் (Mucormycosis) என்னும் கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை தொற்று மிகவும் ஆபத்தானது. இது நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளில் நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, அந்தரங்க உறுப்புகள், வாய்ப்பகுதி போன்றவற்றை பாதிக்க செய்யும். மேலும் இந்த பாதிப்பு ஏற்பட்ட நோயாளிக்கு ஹெச்.ஆர். சி.டி செய்யும் போது அவர்களுக்கு கொரோனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது அதைவிட மிக அதிக பாதிப்பை தரக்கூடிய மஞ்சள் பூஞ்சை தொற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் காஸியாபாத்தில் ஒரு நபருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.சோம்பல், குறைந்த பசி, அல்லது பசியின்மை மற்றும் எடை இழப்பு, காயங்களில் மஞ்சள் பூஞ்சை சீழ் கசிவு, உறுப்பு செயலிழப்பு மற்றும் கண்பார்வை மங்குதல் போன்றவை மஞ்சள் பூஞ்சை அறிகுறிகள் ஆகும்.
மஞ்சள் பூஞ்சை தொற்று முக்கியமாக மோசமான சுகாதாரத்தால் ஏற்படுகிறது. உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள இடத்தை முடிந்தவரை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் பழைய உணவுகள் போன்றவற்றை விரைவில் அகற்ற வேண்டும். கழிவறை சுத்தமாக இருக்க வேண்டும்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR