ஆயுர்வேதத்தில், நாவல் பழத்தின் மரம் முதல் அதன் விதை வரை, பெரிதும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இது நீரிழிவு போன்ற பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய துரிதமான வாழ்க்கை முறையால், நீரிழிவு மற்றும் உடல் பருமன் பிரச்சனைகள் மக்களிடையே பொதுவானதாகிவிட்டது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனது உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தேவை உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மற்றொரு புறம் உடல் பருமன் அதிகரிப்பால், மக்களின் உடல் பல்வேறு நோய்களின் இருப்பிடமாக மாறுகிறது. ஆனால், நாவல் பழ விதைகள் இந்த இரண்டு பிரச்சனைகளிலிருந்தும் உங்களை விடுவிக்கும். அதோடு மட்டுமல்லாமல் சிறுநீரக கற்கள் பிரச்சனையில் இருந்தும் நாவல் பழ விதைகள் நிவாரணம் தருவதாக சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.


நாவல் பழ விதைகளின் நன்மைகள்


இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் சர்க்கரை நோய் பிரச்சனை  பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, நாவல் பழ விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் பொடியை தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.



மேலும் படிக்க | முக அழகை கெடுக்கும் இரட்டை கன்னத்தை நீக்க சில ‘முக’ பயிற்சிகள்!


வயிற்றுப் பிரச்சனைக்கு நிவாரணம் தரும்


நாவல் பழ விதைகளில் நார்ச்சத்து, கொழுப்பு, புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. உடலில் நார்ச்சத்து நன்றாக இருப்பதால் வயிறு எளிதில் சுத்தம் செய்யப்படுகிறது. இதன் பொடியை சாலட், பால் மற்றும் சாறுகளுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.


உடலை நச்சு நீக்கும் நாவல் பழ விதைகள்


உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றும்  ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நவல் பழ விதைகளில் காணப்படுகின்றன. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்கிறது, இது தொற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதை உட்கொள்வதன் மூலம், உடலுக்கு போதுமான பொட்டாசியம் கிடைக்கிறது. இது உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Health Alert: அளவிற்கு மிஞ்சிய புரதம் ‘விஷம்’; எச்சரிக்கும் நிபுணர்கள்!


மேலும் படிக்க | முகத்தில் தொங்கும் சதைகள் அழகை கெடுக்கிறதா... இறுக்கமாக்க சில எளிய வழிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ