முகத்தில் தளர்வான சருமத்தை இறுக்கமாக்க சில டிப்ஸ்: வயது அதிகரிக்கும் போது அதன் பாதிப்புகள் நமது சருமத்தில் தெளிவாக தெரியும். இன்றைய காலத்தில் சுற்றுக்சூழல் மாசுபாடு, வாழ்க்கை முறை உட்பட பல காரணங்களால், சிறு வயயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தை தருகின்றது. சில சமயங்களில் தீய பழக்கவழக்கங்களால் நமது சருமம் வயதிற்கு முன்பே இறுக்கத்தை இழக்க ஆரம்பித்துவிடும். அதனால் சருமம் தளர்வாகிவிடும். முகத்தில் சுருக்கம் ஏற்பட்டால் பெரும்பாலானோர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். அல்லது நவீன அழகு சாதனப்பொருட்களை நாடுகின்றனர். ஆனால், வீட்டிலேயே முயற்சி செய்யக்கூடிய சில சிறந்த வழிகளை அறிந்து கொள்ளலாம்.
முக சருமத்தை இறுக்கமாக்க கீழ்கண்ட முறைகளைப் பின்பற்றவும்:
முக மசாஜ்
முகம் என்பது உடலின் அசையாத பகுதி. அதனால் முகத்தில் ரத்த ஓட்டம் சரியாக இருக்காது. நாம் முகத்தை மசாஜ் செய்யாத வரை, முகத்தில் இரத்த ஓட்டம் இருக்காது. முக மசாஜ் செய்வதற்கு நீங்கள் பல முறைகளைப் பின்பற்றலாம். முகத்தை மசாஜ் செய்வதே முக சருமத்தை இறுக்கமடைய செய்ய சிறந்த வழி, இதைச் செய்வதன் மூலம் சருமம் இறுக்கமடைகிறது. இதற்கு நீங்கள் உங்களுக்கு உகந்த எண்ணெயை உபயோகிக்கலாம். அல்லது முட்டையை வெள்ளைக் கருவை தேனுடன் கலந்து தடவி, பின் 15 நிமிடம் கழித்து கழுவுதும் நல்ல பலன் கிடைக்கும். அல்லது கடலை மாவுடன் முட்டையின் வெள்ளைக் கருவைக் கலந்து பேக் ஆக உபயோகிப்பதும் நல்ல பலன கிடைக்கும்.
மேலும் படிக்க | மருக்களை அடியோடு நீக்கும் ‘பூண்டு - வெங்காயம்’ அடங்கிய மேஜிக் பேஸ்ட் !
சர்க்கரை உணவுகளை தவிர்த்தல்
முதலில், உங்கள் உணவில் இருந்து சர்க்கரையை முற்றிலுமாக நீக்க வேண்டும். நீங்கள் சர்க்கரை கலந்த இனிப்பு உணவுகளை குறைக்க வேண்டும். இது சருமத்தை மிக மோசமாக பாதிக்கிறது.
மேலும் படிக்க | Skin Care: சரும பாதுகாப்பில் வேப்பிலை - மஞ்சள் கூட்டணி செய்யும் அற்புதங்கள்..!
முகப் பயிற்சி
நம் முழு உடலுக்கும் உடற்பயிற்சி தேவைப்படுவது போல், முக சருமத்திற்கும் உடற்பயிற்சி தேவை. ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 3 முறை, நீங்கள் 10 நிமிடங்களுக்கு முகப் பயிற்சிகளை செய்ய வேண்டும். இது உங்கள் முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இது முக யோக என தற்போது பலராலும் பின்பற்றப்படுகிறது. இது அதிசயத் தக்க பலன்களையும் தருகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | முக சுருக்கக்களை மாயமாய் நீக்கும் ‘பாதாம் எண்ணெய்’ மசாஜ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ