Weight Loss Mistakes: இன்றைய வாழ்க்கை முறையில், அதிக உடல் எடை என்பது பெரும்பாலானோரின் பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், உடல் எடையை குறைக்க பெரும் முயற்சிகள் எடுத்த போதிலும், சிலருக்கு அதில் வெற்றி கிடைப்பதில்லை. அதனை ஆராய்ந்து பார்த்தால், அவர் எடை குறைப்பு முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போவதற்கு, அவர்கள் செய்யும் பொதுவான தவறுகள் காரணமாகிறது. உடல் எடையை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளும் போது, சில விஷயங்களில் கவனம் செலுத்துவதும் முக்கியம். அதிலும் முக்கியமாக கீழே கொடுக்கப்பட்டிருப்பது போன்ற சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், சில முக்கியமான விஷயங்களை, ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. அதில் கவனம் செலுத்தவில்லை என்றால், உடல் எடையை குறைக்கும் உங்கள் கடின உழைப்பு அனைத்தும் பாழாகிவிடும்.
உடல் எடையை குறைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:
1. கலோரிகள் குறித்த புரிதல்
பெரும்பாலானோரின் பிரச்சனை என்னவென்றால், உடல் எடையைக் குறைக்க வியர்வை சிந்தி, கடினமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும், மறுபுறம், அவர்கள் கலோரிகள் பற்றி சிந்திக்காமல், அனைத்து வகையான உணவுககளையும் சாப்பிடுகிறார்கள். எனவே உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், தாங்கள் உண்ணும் உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன; அந்த உணவு ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். இதன் மூலம் அதிக கலோரிகளை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். உங்கள் எடையைக் குறைப்பு முயற்சிகள் வெற்றி பெற இது உதவும்.
2. சரியான அளவு புரதத்தை உட்கொள்வது மிகவும் முக்கியம்
உடல் எடையை குறைக்க கடினமாக முயற்சி செய்யத் தொடங்கும் நாளிலிருந்தே, புரதச்சத்து நிறைந்த உணவை உணவில் சேர்க்கத் தொடங்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எடை இழப்புக்கு முயற்சி செய்கையில், சிலர் சரியான அளவு புரத சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் அவர்கள் முயற்சி வீணாகி விடும். ஏனெனில் புரதம் பசியை குறைக்க உதவுகிறது. எடை இழப்பின் போது, தசைகளையும் தளராமல் பாதுகாக்கிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக புரதம் நிறைந்த உணவுகளை உண்ணுவது அவசியம்.
3. உடற்பயிற்சி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
பெரும்பாலான மக்கள், இன்றே பலன் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில், சீரான உடற்பயிற்சி செய்வதற்குப் பதிலாக, தொடக்கத்திலேயே அதிகமாக உடற்பயிற்சி செய்யத் தொடங்குகிறார்கள். முறையாக உங்கள் பயிற்சியாளரிடமிருந்து ஆலோசனையைப் பெற்று, பயிற்சி செய்ய வேண்டிய காலநேரத்தையும் அளவையும் நிர்ணயிக்கவும். புதிதாக ஒருவர் உடற்பயிற்சி செய்யத் தொடங்குகிறார் என்றால், முதலில் எளிதான பயிற்சிகளை செய்து, பின்ன மெதுமெதுவாக நேரத்தையும், பயிற்சியையும் அதிகரிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில், தேவைக்கு அதிகமாக செய்யக் கூடாது என்பதில், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
4.தினசரி பழக்க வழக்கத்தின் மீது கவனம்
உடல் எடையை குறைக்க வேண்டுமானால், முதலில் இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இதற்கு உங்களின் அன்றாட பழக்க வழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இரவில் வெகுநேரம் விழித்திருந்து, பகலில் வெகுநேரம் வரை தூங்கினால், அது உங்கள் எடை குறைப்பு முயற்சிகள் வீணாக வழிவகுக்கும். எனவே தூங்கி எழும் நேரத்தை முடிவு செய்யுங்கள். தினசரி வேலைகளை திட்டமிடுவதன் மூலம் தினசரி அட்டவணையை தயார் செய்யலாம். இதைத் தொடர்ந்து பின்பற்றி வருவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானது இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | Health Alert: காலி வயிற்றில் சாப்பிடக் கூடாத சில உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ