ரத்தம் நீர்த்து போக வைட்டமின் கே காரணமா? ஆனால் எலும்பு பலமா இருக்க இதுதானே காரணம்?
Bone Health And Vitamin K: எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்க வைட்டமின் கே1 நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்
Vitamin K Health Benefits: எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்க, தினசரி 100 மைக்ரோகிராம் வைட்டமின் கே1 ஐ உட்கொள்ள வேண்டும். நமது உடலில் உள்ள இரத்தம் உறைவதற்கு தேவைப்படும், வைட்டமின் கே எலும்புகளை பலப்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் இந்த வைட்டமின், இதய நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. இரத்த சோகைக்கு காரணம் வைட்டமின் கே குறைபாடு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அளவுக்கு அதிகமாக இந்த வைட்டமினை உட்கொண்டால், உடலில் உள்ள இரத்தம் நீர்த்துவிடும், இது உடலுக்கு மிகவும் ஆபத்தானது.
வைட்டமின் கே உடலில் இரத்த ஓட்டத்தை பராமரிக்கிறது. இரத்தத்தை உறையச் செய்யும் ஜிஎல்ஏ புரதங்கள், தாதுக்கள் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களை ஊக்குவித்து, உடலில் இரத்தம் உறைவதை இது தடுக்கிறது. ஆனால்,கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் கே அதிகம் எடுத்துக் கொண்டால் ரத்தத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும். ஆனால், வயதானவர்கள், எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்க, தினசரி 100 மைக்ரோகிராம் வைட்டமின் கே1 எடுத்துக் கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் படிக்க | சர்வரோக நிவாரணி அன்னாசிப்பழம்: நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற பழம்
வயதாகும்போது, எலும்புகள் பலவீனமடைவதால், வைட்டமின் K1 ஐ அதிகமாக உட்கொள்வது உதவும் என்று எடித் கோவன் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சி நிறுவனம் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய்யப்பட்ட ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின்படி, அதிக வைட்டமின் கே1 சாப்பிடும் பெண்களில், இடுப்பு எலும்பு முறிவு மருத்துவமனையில் சேர்க்கப்படும் ஆபத்து கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது. அதிக வைட்டமின் K1 நிறைந்த இந்த உணவுகள், அனைவருக்கும் நல்லது என்று ஆய்வு பரிந்துரைத்துள்ளது.
காலே
இது வைட்டமின்கள் ஏ, கே, பி6 மற்றும் சி, கால்சியம், பொட்டாசியம், தாமிரம் மற்றும் மாங்கனீஸ் ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.
கிவி
இதயம், செரிமான ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நன்மை பயக்கும் கிவியில் வைட்டமின் கே தவிர, அதிக அளவு உணவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது.
கீரை
கீரைகளில் அதிக அளவு வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில், வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
மேலும் படிக்க | இடுப்பில் வலி ஏற்படுகிறதா? ஜாக்கிரதை கொலஸ்ட்ராலாக இருக்கலாம்
பீன்ஸ்
வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே மற்றும் ஃபோலிக் அமிலம், தியாமின், நியாசின், கால்சியம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் வளமான மூலம் பச்சை பீன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடிமுந்திரி
கொடிமுந்திரி அல்லது உலர்ந்த பிளம்ஸ் வைட்டமின்கள், தாதுக்கள், அத்துடன் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகும்.
அவகேடோ
வெண்ணெய் பழம் எனப்படும் அவகோடாவில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிரம்பியுள்ளன. இந்த பழம் எடை இழப்பை ஊக்குவிக்கிறது, இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, கண்பார்வை மற்றும் எலும்பு அடர்த்தியை மேம்படுத்துகிறது.
தினமும் எவ்வளவு வைட்டமின் K1 உட்கொள்ள வேண்டும்?
ஆராய்ச்சியாளர்கள் தினமும் 100 மைக்ரோகிராம் வைட்டமின் K1 ஐ உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இந்த வைட்டமின் குறைபாட்டால் முடி உதிர்வு கட்டாயம் ஏற்படும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ