சர்வரோக நிவாரணி அன்னாசிப்பழம்: நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற பழம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளைத் தரும் அன்னாசிப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகம் உள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 29, 2022, 06:51 PM IST
  • பல்வேறு நோய்களைப் போக்கும் அன்னாசி
  • அன்னாசிப் பழத்தின் ஆரோக்கியப் பண்புகள்
  • நீரிழிவு நோய் பாதித்தவர்களும் அன்னாசி உண்ணலாம்
சர்வரோக நிவாரணி அன்னாசிப்பழம்: நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற பழம்

நியூடெல்லி: ​​நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு, நல்ல உணவு, பழங்கள் சாப்பிட வேண்டும். அன்னாசி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் குணங்கள் பல உள்ளன. நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளைத் தரும் அன்னாசிப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளன. அன்னாசிப்பழத்தின் நன்மைகள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? பட்டியலே போடலாம்.

அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் அன்னாசிப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது. இது உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் அன்னாசிப்பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.  

நீரிழிவு நோய் என்பது டலில் இரத்த குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரை அளவுகள் மிகவும் அதிகமாக இருக்கும்போது இந்த நிலை ஏற்படுகிறது, எனவே உங்கள் இரத்த சர்க்கரை அளவைத் தடுக்காத உணவைத் தேர்ந்தெடுப்பது இந்த நாள்பட்ட நோயை இயற்கையாகக் கட்டுப்படுத்த உதவும். அன்னாசிப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரைகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையைத் தருகிறது.

மேலும் படிக்க | குளிர்காலத்தில் பைல்ஸ் பிரச்சனை அதிகரிக்கும் ஜாக்கிரதை!! இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும் 

பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள அன்னாசிப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் உண்னலாம். உடல் எடை குறைக்கவும் அன்னாசிப் பழம் உதவுகிறது. புளிப்பும் இனிப்புமாக சுவைக்கும் அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகளின் அளவு மிகவும் குறைவாகவும் இருப்பதால் விரைவில் பசி எடுக்காது அதோடு, இதில் உள்ள நார்ச்சத்துக்கள் பல்வேறு நன்மைகளைத் தருகின்றன.  

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் நீக்கும் அன்னாசிப்பழம் செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்குகிறது.

அன்னாசிப்பழத்தில் வைட்டமின்-ஏ அதிக அளவில் இருப்பதால், கண்களுக்கும் நன்மை பயக்கும், எலும்புகளை வலுப்படுத்தும். 

பற்களின் ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் அன்னாசிப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மூட்டுவலி நோயாளிகளுக்கும் அன்னாசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஈறுகளில் வீக்கத்தைக் குறைக்க அன்னாசிப்பழம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பைல்ஸ் பிரச்சனை பாடாய் படுத்துதா? இந்த 5 உணவுகளை டயட்டில் சேருங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News