கால்சியம் பற்றாக்குறையினால் மட்டும் எலும்புகள் வலுவிழந்து விடுவதில்லை.  சில ஆபத்தான பழக்கவழக்கங்கள் காரணமாகவும் எலும்புகள் பலவீனமடைகின்றன. பல சமயங்களில்  நாம் செய்யும் தவறுகளால்,  உடலில் இருக்கும் எலும்புகள் வலுவிழக்கத் தொடங்குகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலும்புகள் வலுவிழந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்னும் எலும்பு மெலிதல் நோய், மூட்டு வலிகள், எலும்பு முறிவு போன்ற பல உடல் நல பிரச்சனைகள் நம்மைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்குகின்றன. 


அதிலும், ஆஸ்டியோபோரோசிஸ் நோயை முற்றிலுமாகத் தீர்க்க எந்த மருந்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எலும்பு மெலிதல் நோயின் காரணமாக வரும் வலியை, மருந்துகள் மூலம் குறைக்க மட்டுமே முடியும். அதனால் அதிக எச்சரிக்கை தேவை.


எனவே எலும்புகள் வலுவிழக்கத் தொடங்கும் கால்சியம் பற்றாக்குறையை தவிர வேறு காரணங்கள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன


புகைபிடிப்பதும் ஒரு முக்கிய காரணம்


முதலாவதாக, எலும்புகள் வலுவிழக்க புகைபிடிப்பதும் ஒரு முக்கிய காரணம். நீங்கள் தொடர்ந்து புகைபிடித்தால், அதன் பாதிப்பு எலும்புகளில் காணப்படும். புகைபிடிப்பதால், உடலால் புதிய ஆரோக்கியமான எலும்பு திசுக்களை எளிதில் உருவாக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், புகைபிடிப்பவர்களின் எலும்புகள் உடைந்து போகும் ஆபத்து அதிகமாக உள்ளது.


அதிக உப்பு உட்கொள்ளுதல்


இது தவிர, அதிக உப்பை உட்கொள்வதும் எலும்புகளை பாதிக்கிறது. உண்மையில், அதிக உப்பை உட்கொள்வதன் மூலம் உடல் உள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படுகிறது.


மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்


ஊட்டச்சத்து குறைபாடுகள்


உணவில் போதுமான ஊட்ட சத்துக்களை சேர்க்காததும் பெரிய தவறு. பதின்மவயதினர் பலருக்கு துரித உணவுகள் சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் எலும்புகள் பலவீனமடைகின்றன. இது தவிர, போதுமான தூக்கம் இல்லாததாலும் எலும்புகள் பலவீனமடைவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


இடைவிடாமல் டிவி பார்ப்பது


இதனுடன், தொடர்ந்து டிவி பார்ப்பவர்களின் எலும்புகளிலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். உண்மையில், தொடர்ந்து டிவி பார்க்கும் போது, ​​உங்கள் உடலை அதிகம் அசைப்பதில்லை, அதனால் உங்கள் எலும்புகள் பலவீனமடையும் வாய்ப்புகள் அதிகம்.


(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும்  சிகிச்சைக்கான மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.)


மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR