வலுவான எலும்புகள் வேண்டுமா? இதை சாப்பிடுங்க போதும்.. இன்னும் பல நன்மைகளும் இருக்கு!!
Food for strong Bones: பல நேரங்களில் தவறான உணவுப் பழக்கத்தால், நமது எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. அதன் காரணமாக நமது உடல்நிலையும் அமைப்பும் கெட்டுப்போகும்.
வலிமையான எலும்புகளுக்கான உணவு: வலிமையான எலும்புகள் நம் உடலுக்கு மிகவும் முக்கியம். எலும்புகள் நம் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். வலிமையான எலும்புகள் நமது உடலை நிலையாக வைத்துக் கொள்ள உதவுவதால், இவை சரியாக இருந்தால், இதனால், நமது அன்றாடச் செயல்பாடுகளை எளிதாகச் செய்யலாம். மேலும், வலுவான எலும்புகள் நமது உடலின் கட்டமைப்பிற்கு அடிப்படையாக அமைகின்றன. நமது எலும்புகள் பலவீனமாக இருந்தால், அவை எளிதில் உடைந்துவிடும். மேலும் பலவீனமான எலும்புகள் வலியை ஏற்படுத்தும். வலுவான எலும்புகள் உடலை சிறந்த முறையில் கட்டமைத்து உடலுக்கு அதிக பாதுகாப்பை அளிக்கின்றன.
இருப்பினும், பல நேரங்களில் தவறான உணவுப் பழக்கத்தால், நமது எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. அதன் காரணமாக நமது உடல்நிலையும் அமைப்பும் கெட்டுப்போகும். எலும்புகளை வலுவாக்க கால்சியம் தேவைப்படுகிறது. கால்சியம் பல வகையான உணவுகளில் காணப்படுகிறது. கால்சியம் அதிகமக இருக்கும் ஒரு சிறப்பு வகை விதை பற்றி இந்த பதிவில் காணலாம். இவை பாப்பி விதைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உடலில் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை பயக்கும்.
கால்சியம் தவிர, புரதம், இரும்பு, மக்னீசியம், நார்ச்சத்து, துத்தநாகம், தாமிரம், செலினியம், வைட்டமின் ஈ உள்ளிட்ட பல சத்துக்கள் இதில் உள்ளன. இந்த விதைகள் கசகசாவிலிருந்து பெறப்படுகின்றன. அவற்றை உண்ணக்கூடியதாக மாற்றுவதற்கு பல வித செயல்முறைகள் செய்யப்படுகின்றன. இந்த விதைகளை சரியான அளவில் உட்கொள்வது பல நன்மைகளைத் தருகிறது. இந்த விதைகளை உண்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை குறைக்க இந்த ஒரு காய்கறி வரப்பிரசாதம்..! கோடையில் சாப்பிடுங்கள்
செரிமானத்திற்கு நன்மை பயக்கும்
கசகசாவில் நார்ச்சத்து உள்ளது. இது ஒரு நல்ல செரிமான செயல்முறைக்கு முக்கியமானது.
ஆற்றல் ஆதாரம்
கசகசாவில் கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடலுக்கு நல்ல ஆற்றல் மூலமாக விளங்குகிறது.
நன்றாக தூங்க உதவும்
கசகசாவில் தியோனைன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது நன்றாக தூங்க உதவுகிறது.
இதயத்திற்கு நன்மை பயக்கும்
கசகசாவில் இதயத்திற்கு நன்மை செய்யும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் உள்ளது.
புற்றுநோய்
கசகசாவில் பைட்டோ கெமிக்கல் என்ற சிறப்பு மூலகம் உள்ளது. இது புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எலுமிச்சை பழம் நல்லதுதான்! ஆனால் இந்த பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ