Protein for Health : உடல் எடையை சரியாக பராமரிக்கவும், அழகாக தோற்றமளிக்கவும் அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால், அதிகரித்து வரும் உடல் எடையை குறைப்பது சாதாரணமானது இல்லை என்பது நிதர்சனமான உண்மை. உலக உடல் பருமன் தினமான (World Obesity Day) இன்று, எடை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் கட்டுரை இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக உடல் எடையை அதிகரிப்பது என்பது சுலபமானது, ஆனால் ஏறிய எடையை குறைப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம் ஆகும்.  இன்றைய காலகட்டத்தில், பலரும் பல முயற்சிகள் செய்தாலும் உடல் எடையை குறைக்க முடிவதில்லை. உண்மையில் குண்டாக இருப்பது பிரச்சனையாக இருப்பதாக இருந்தால், புரதமே அதற்கு உதவுகிறது. அதிலும் உடல் எடை அதிகரிக்க காரணமான சுவையான உணவுகளைக் கொண்டே உடல் எடையை குறைக்கலாம். அது எப்படி தெரியுமா?


எடையைக் குறைக்க உதவும் அதிக புரத உணவுகள்
குறைந்த கொழுப்புள்ள புரதம் அதிகமாக உள்ள உணவுகள் எடை இழப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆச்சரியமா இருந்தாலும், உடல் எடையைக் குறைக்க புரதம் எப்படி பயன்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


ஹார்மோன் கட்டுப்பாட்டிற்கு புரதம்
அதிக புரத உணவு உங்கள் வயிற்றை விரைவாக நிரப்புகிறது, இது பசியைக் குறைக்கும் ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் இயல்பாகவே பசியைக் குறைப்பதால், உண்ணும் உணவின் அளவு குறையும், இது உடல் எடையை குறைக்க உதவும்.


மேலும் படிக்க | யூரிக் அமிலம், கீல்வாத பிரச்சனைகளுக்கு... முடிவு கட்டும் சூப்பர் பழங்கள்


வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்


உடல் எடையை குறைப்பதில் வளர்சிதை மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. புரதம் நிறைந்த உணவுகளை உண்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது, நமது செரிமான அமைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவும். உண்மையில் புரதத்தை செரிமானம் செய்ய உடலுக்கு 20 முதல் 30 சதவீதம் கலோரிகள் தேவைப்படுகின்றன. உடலில் உள்ள கலோரிகளை எரிப்பதால் உடல் எடையை குறைக்கலாம். 


பசியின்மைக்கு காரணமாகும் புரதம்
சிலருக்கு இரவில் நீண்ட நேரம் ஆன பிறகும் பசி எடுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் தின்பண்டங்களை சாப்பிடுவார்கள். அதன்பிறகு உடனடியாக தூங்கிவிடுவார்கள். இது உடல் எடையை அதிகரிக்க முக்கிய காரணமாக மாறும். ஆனால், இரவு உணவில் புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், நள்ளிரவில் பசி எடுக்காது. ஏனெனில் புரத உணவு பசியைக் கட்டுப்படுத்தும்.


கலோரிகளை எரிக்கும் ஆழ்ந்த உறக்கம்
அதிக புரதச்சத்து கொண்ட உணவை உண்டால், ​​தூக்கத்தின் போதும் கலோரிகளை எரிக்கிறது. அதிக புரத உணவை உட்கொள்வதன் மூலம் ஆழ்ந்த உறக்கம் வாய்க்கும் நாளொன்றுக்கு 80 முதல் 100 கலோரிகளை எரிக்கலாம்.


மேலும் படிக்க | தலைமுடி ஆரோக்கியமாகவும், அழகாகவும் வளர... இந்த 7 உணவுகள் அவசியம்!


மந்தமாகும் பசி
அதிகப் புரதச்சத்து சாப்பிடுவதால் விரைவில் வயிறு நிரம்பிவிடும். இதனால் அடிக்கடி பசி எடுக்காது. உணவு குறைவாக உட்க்கொண்டால், ​​உடல் எடை குறையத் தொடங்குகிறது.


கொழுப்பு சேர்வதை தடுக்கும் புரத உணவு
புரத உணவுகள் கலோரி சமநிலையை மேம்படுத்துவதோடு, உடலில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது. இதனால் உடலில் கொழுப்புச்சத்து சேராது. கலோரிகளை எரிக்க உதவும் புரத உணவு, கொழுப்புச்சத்தை உடலில் இருந்து அகற்ற உதவுகிறது.


அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள்


முட்டை, பால், பருப்புகள், உலர்பழங்கள், பனீர், கோழி, பாதாம், கீரை, தயிர், முழு தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது. 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஒல்லி பெல்லி வேணுமா? எடை குறையணுமா? வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க போதும்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ