மூளை உடலின் ஆற்றல் மையம் என்பார்கள். அவர் உடலின் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறது. அதன் கட்டளைப்படியே உடல் செயல்படுகிறது. அதனால் தான் அதை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. ஆனால் நமது அன்றாட தீய பழக்கங்களில் சில மூளையை உள்ளே இருந்து சேதப்படுத்த ஆரம்பிக்கின்றன.இந்த ஆரோக்கியமற்ற பழக்கங்களிலிருந்து விரைவில் விலகி இருக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இளமையிலேயே முதுமை கதவை தட்டும்: 


முதுமையில் தான் நமது மூளை பலவீனமடைந்து தன் வேலையைச் செய்யும் திறனை இழக்கத் தொடங்குகிறது. ஆனால் இந்த ஆரோக்கியமற்ற பழக்கம் காரணமாக இளைமையிலே மூளையின் சக்தி குறைக்கிறது. பலவீனமான நினைவாற்றல், மூளையின் செயல்பாடு குறைதல், கற்றலில் சிக்கல்கள் ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம். மூளையின் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள என்னென்ன விஷயங்களைச் செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்வோம்...


சூரியனை கண்டு ஒதுங்குதல்


நமது வாழ்க்கை முறையாலும், நாள் முழுவதும் ஏசியில் இருப்பதாலும் பெரும்பாலானோர் வெயிலில் செல்லவே விரும்புவதில்லை. இதன் காரணமாக வைட்டமின் டி குறைபாட்டின் ஆபத்து அதிகரிக்கிறது. NCBI ஆய்வு, இந்த ஊட்டச்சத்தின் குறைபாடு மூளை மற்றூம் மன ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என விவரிக்கிறது. இது மனச்சோர்வு, டிமென்ஷியா, மன இறுக்கம், ஸ்கிசோஃப்ரினியா போன்ற மனநல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


பொரித்த உணவுகள் & துரித உணவுகள்:


பொரித்த உணவுகள் மற்றும் துரித உணவுகள் மிகவும் சுவையானவை. ஆனால் இதில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் நிறைந்துள்ளன. இத்தகைய உணவுகளை குப்பை உணவு என்று தான் கூற வேண்டும். இந்த உணவுகளில் ஆக்ஸிஜனேற்றப்பட்ட கொழுப்புகள்  அதிகம் உள்ளன. அவை வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் மூலம் மூளையை சேதப்படுத்துகின்றன. நீங்கள் தினமும் நொறுக்குத் தீனிகளை உண்ணும் பழக்கம் இருந்தால், அதனால், அல்சைமர் அல்லது பார்கின்சன் நோய் அபாயம் மிகவும் அதிகரிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே இவற்றை வாரம் ஒரு முறை என்ற அளவில் நிறுத்திக் கொள்வது மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.


சோம்பல் மற்றும் ஓய்வு


சோம்பல் மற்றும் அதிக அளவு ஓய்வு பழக்கம் நாம் எதுவும் செய்யலாமல் இருக்கிறோம். இதனால், உடலின் ரத்த ஓட்டம் பலவீனமடைந்து, மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது. படிப்படியாக செல்களின் வலிமை குறைய ஆரம்பித்து மூளை பலவீனமடைகிறது. நினைவாற்றல் குறைகிறது.


போதை


போதை எதுவாக இருந்தாலும் அது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. ஆல்கஹால் மூளை செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உங்கள் நினைவாற்றல் மிகவும் பலவீனமாகி, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் அல்லது சிந்திக்கும் சக்தியும் குறையத் தொடங்குகிறது.


வீட்டில் முடங்கும் பழக்கம்


சிலருக்கு வெளியில் சென்று மற்றவர்களுடன் கலந்து பழகுவதில் ஆர்வம் இருக்காது. பெரும்பாலும் வீட்டிலேயே முடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அது உங்கள் மூளை வளர்ச்சியை மோசமாக பாதிக்கும். அதனால் மனச்சோர்வு, புத்திசாலித்தனத்தில் தேக்கம், மன அழுத்தம் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)


மேலும் படிக்க | Mental Health: கண்ணீர் விடும் மனது... 6 அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ