ஆஸ்டியோபோரோசிஸ் என்பது ஒரு தீவிரமான எலும்பு நோயாகும், இந்த நோய் ஏற்பட்டால், நமது எலும்புகள் கால்சியத்தை இழக்கத் தொடங்குகின்றன. இதனால் நமது எலும்புகள் மிகவும் பலவீனமடைகின்றன. கால்சியம் நிறைந்த உணவு எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. போதுமான அளவு கால்சியத்தை உட்கொள்வது ஹைபோகால்சீமியா (Hypocalcemia) போன்ற நோய்களைத் தவிர்க்க உதவும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
 
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது ஒரு ஆபத்தான நோயாகும், இதன் காரணமாக நமது எலும்புகள் கால்சியத்தை இழக்கத் தொடங்குகின்றன. கால்சியம் குறைபாடு காரணமாக, நமது எலும்புகள் தொடர்ந்து பலவீனமடைகின்றன, இது நமது எலும்பு ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் இந்த நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், சுமார் 1 கோடி பேர் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமல்ல, 35-40 வயதிற்குப் பிறகு, நமது எலும்புகள் படிப்படியாக பலவீனமடையத் தொடங்குகின்றன. இது இயல்பாக நிகழும் ஒரு மாற்றம் ஆகும். நமது எலும்புகள் கால்சியத்தை இழக்கத் தொடங்குவதால் எலும்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் நமது எலும்புகளில் முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.



எலும்புகள் பலவீனமடைவதற்கு வைட்டமின்-டி குறைபாடு, மது மற்றும் புகைப்பழக்கம் ஆகியவையும் காரணங்கள் ஆகும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு, ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் அதிகரிக்கிறது. கால்சியம் குறைபாட்டை ஈடுசெய்யும் 5 உணவுகளை தொடர்ந்து உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் வலுவான எலும்புகளைப் பெற்று நிம்மதியாக வாழலாம்.  


எலும்புகளுக்கு போதுமான கால்சியத்தை வழங்கக்கூடிய 6 அற்புதமான உணவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.


கால்சியம் நிறைந்த உணவுகள்
பால் மற்றும் பால் பொருட்கள்
பால், தயிர், பாலாடைக்கட்டி மற்றும் வெண்ணெய் போன்ற உணவுகளில் கால்சியம் நிறைந்துள்ளது. நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியத்தைக் கொடுக்கும் வகையில் இது செயல்படுகிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். தினமும் ஒரு கப் தயிர், பால் 1 கிளாஸ் பால் என்பதை உணவில் சேர்த்துக் கொண்டால் கால்சியம் குறைபாடு ஏற்படாது.


கொட்டைகள்
கால்சியம் தவிர, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பிற ஊட்டச்சத்துக்களில் கொட்டைகள் நிறைந்துள்ளன. நமது எலும்புகளுக்கு முழுமையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. எலும்புகள் பலவீனமாவதைத் தடுக்க,  உணவில் பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, திராட்சை போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட கொட்டைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | Diabetic Diet: இவற்றை உணவில் சேருங்கள், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்


வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கால்சியத்துடன் மெக்னீசியம் சத்தும் அடங்கியிருக்கிறது. இந்த காம்பினேஷன், நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சிறப்பானது. தினமும் 2 வாழைப்பழங்களை உணவில் சேர்த்து வந்தால், தினசரி தேவையான கால்சியம் சத்து கிடைக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


பழங்கள்


ஐந்து உலர்ந்த அல்லது புதிய அத்திப்பழங்களை உண்பதன் மூலம் 135 மில்லிகிராம் கால்சியத்தை பெறலாம். ஆரஞ்சு மற்றும் பப்பாளி ஆகியவை கால்சியம் அதிகம் உள்ள பழங்கள் ஆகும்.


சைவ உணவுகளில் கால்சியம்


பசலைக்கீரை, சமைத்த முட்டைக்கோஸ் மற்றும் வெவ்வேறுவிதமான கீரைகளில் கால்சியம் அதிக அளவில் உள்ளன. உலர் வறுத்த சோயாபீன்ஸ் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். சைவ உணவை உட்கொள்பவர்களுக்கு கால்சியத்தின் சிறந்த ஆதாரமாக விளங்கும் சோயாபீன்ஸின் அரை கோப்பையில் 230 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.


முழு தானியங்கள்


குயினோவா மற்றும் அமராந்த் போன்ற முழு தானியங்களும் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்கள். ஒரு கப் குயினோவாவில் 17 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது தவிர, இதில் மாங்கனீஸ், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற தனிமங்களும் ஏராளமாக உள்ளன. இது நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


மேலும் படிக்க | கீல்வாத நோய் ஏற்படாமல் தடுக்க வீட்டு வைத்தியம்! எலும்பு வலுவானால் ஆல் இஸ் வெல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ