தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை, கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என்று இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NHS இன் இந்த எச்சரிக்கை பெண்கள் உரிமைக்கான பல அமைப்புகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அமைப்புகளிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றுள்ளது. எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டதாக பலர் நம்புகிறார்கள். மேலும் பெண்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் அவர்களின் சொந்த நலனுக்கும் இடையே தேர்வு செய்யும்படி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்பதும் பலரது கருத்தாக உள்ளது.


புதிய தாய்மார்களுக்கு COVID-19 தடுப்பூசி பாதுகாப்பற்றது என்பதற்கு NHS இதுவரை எந்த ஆதாரத்தையும் வழங்க முடியவில்லை. "கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு இந்த தடுப்பூசி பாதுகாப்பற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர் இது குறித்த கூடுதல் சான்றுகள் தேவை" என்று NHS கூறுகிறது.


இருப்பினும், NHS வலைத்தளமும் இந்த எச்சரிக்கை ஒரு முன்னெச்சரிக்கை மட்டுமே என்று கூறுகிறது. "கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆகியோருக்கு இந்த கொரோனா தடுப்பூசியைப் (Coronavirus Vaccine) பயன்படுத்துவது பாதுகாப்பானது என்பதற்கான கூடுதல் ஆதாரங்கள் கிடைக்கும் வரை முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது" என்று வலைத்தளம் கூறுகிறது.


ALSO READ: Coronavirus Vaccine போட்டுக்கொள்ளும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்


உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இங்கிலாந்தில் (England) கிட்டத்தட்ட 46 சதவீத தாய்மார்கள் 2018-2019 ஆம் ஆண்டில் 6-8 வாரங்களுக்கு இடைப்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளனர்.


இந்த எச்சரிக்கை, ஒரு விதியாக்கப்பட்டால், நாடு முழுவதும் உள்ள நூறாயிரக்கணக்கான தாய்மார்களை அது பாதிக்கும். இதில் நோயாளிகளையும் அவர்களின் குழந்தைகளையும் ஒன்றாகப் பராமரிக்கும் பல்லாயிரக்கணக்கான முன்னணி தொழிலாளர்களும் உள்ளனர்.


NHS இதை வெறும் எச்சரிக்கையாக மக்களுக்கு தெரிவித்துள்ளது. எனினும், மக்களுக்கு மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்கு முன்னர், இது குறித்த அதிக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.


கர்ப்பிணிப் பெண்களும் (Pregnant Women) தடுப்பூசி போடுவதைத் தவிர்க்குமாறு இங்கிலாந்து அரசாங்கங்களின் வலைத்தளம் வலியுறுத்துகிறது. "நீங்கள் கர்ப்பமாக இருந்தால் உங்களுக்கு தடுப்பூசி போடப்படாது, உங்களுக்கு குழந்தை பிறந்ததும் தடுப்பூசி போடப்படும்” என்று வலைத்தளம் கூறுகிறது.


"நீங்கள் கர்ப்பமாக இருக்கக்கூடும் என்று உங்களுக்குத் தோன்றினால், அதை தடுப்பூசி (Vaccine) போட்டுக்கொள்வதற்கு முன்னர் உறுதி செய்துகொள்ளவும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “அடுத்த மூன்று மாதங்களில் குழந்தைக்காக திட்டமிட்டிருந்தாலும், நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தள்ளிப்பொடலாம்” என்றும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.


ALSO READ: இந்தியாவில் Covid தடுப்பூசி போட மக்கள் பயப்படுவதன் காரணம் என்ன?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR