கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் Itolizumab ஊசி மருந்து பலனளிக்குமா…
கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க Itolizumab ஊசியை பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
சுவாச பிரச்சனை தீவிரமாகும் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க Itolizumab ஊசி மருந்தை பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி(New Delhi): மிதமான மற்றும் கடுமையான சுவாசப் பிரச்சினைகள் உள்ள கோவிட் -19 நோயாளிகளுக்கு தோல் பிரச்சனைக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஐடோலிஸுமாப் (Itolizumab) என்னும் ஊசி மருந்தை பயன்படுத்தப்படுவதற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
ALSO READ | நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி..... கொரோனாவை துரத்தும் ஆற்றல் மிக்க சக்தி...!!!
கோவிட் -19 சிகிச்சைக்கான மருத்துவ சிகிச்சைக்கான தேவைகளை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடையும் போது, நுரையீரலுக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவில் பற்றாக்குறை ஏற்பட்டு உடல் நிலை மோசமடைகிறது. இது போன்ற தீவிர பயன்நிலை ஏற்பட்டால், அதற்கு சிகிச்சையளிப்பதில் அவசரகாலங்களில் பயன்படுத்தப்படும் மோனோக்ளோனல் ஆன்டிபாடி ஊசி மருந்தான ஐடோலிஸுமாப் (Itolizumab) என்ற மருந்தை குறிப்பிட்ட அளவு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஜெனரல் டாக்டர் வி.ஜி சோமானி தெரிவித்தார்.
இந்த ஊசி மருந்தை பயன்படுத்துவது தொடர்பாக, எய்ம்ஸ் உள்ளிட்ட பிற மருத்துவமனைகளில் உள்ள சுவாச நோய் நிபுணர்களிடம் கலந்தாலோசனை நடத்தி, கோவிட் -19 நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்ட பிறகே இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். இந்தியாவில் கோவிட் -19 நோயாளிகளிடம், சிறந்த முறையில் எய்ம்ஸ் உள்ளிட்ட மருந்துவ நிபுணர்களின் குழு நடத்திய மருத்துவ பரிசோதனைக்கு பிறகுதான், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ALSO READ | Immunity அதிகரிக்க கஷாயம் குடிக்கிறீர்களா? அப்படியானால் இதை அவசியம் படியுங்கள்!!
இது தொடர்பாக மேலும் தகவல்களை வழங்கிய, அந்த அதிகாரி கடந்த பல ஆண்டுகளாக, இந்த ஊசி மருந்து, அதாவது Itolizumab என்னும் ஊசி மருந்தை தோல் நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவும், இது பயோகான் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மருந்து எனவும் கூறினார். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு, ஒவ்வொரு நோயாளியிடம் இருந்தும் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அவசியம் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இந்தியாவில், கொரோனா தொற்றினால் இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமாகியுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 22 ஆயிரம் என தரவுகள் கூறுகின்றன.