குளிர்காலத்தில் உடல் குண்டாவது பெரும்பாலும் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனை தான். எடை அதிகரிப்பு பற்றி கவலைப்படுபவர்கள், தங்கள் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பதைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளிர்காலத்தில் மனம் அமைதியாக இருக்கும். சூடாக எதாவது சாப்பிட வேண்டும், காரசாரமாக உண்ண வேண்டும் என தோன்றும் காலம். வெப்பநிலை குறைவதால், சூடான மற்றும் காரமான சுவையான உணவுகளை விரும்புகிறோம், இது எதிர்பாராத எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். பருவ கால உணவுகளை அனுபவித்து உண்பது இயற்கையானது அதுவே இயல்பானது என்றாலும், நாம் செய்யும் உணவுத் தேர்வுகளில் கவனம் செலுத்துவது முக்கியம். ஆனால் சில உணவுகளை அதிகமாக உட்கொண்டால், குளிர்காலம் முடியும்போது உடல் எடை அதிகரித்து கவலை ஏற்படுத்தும். 


குளிர்காலத்தில் அதிக எடை அதிகரிப்பு பற்றி கவலைப்படுபவர்கள் இந்த 5 உணவுகளை தவிர்க்க முயற்சி செய்யலாம்.


கிரீம் சேர்த்த சூடான சாக்லேட்
சூடான சாக்லேட் பலரால் விரும்பப்படும் ஒரு பிரபலமான குளிர்கால பானமாகும். இருப்பினும், சூடான சாக்லேட் பானத்தில் சேர்க்கப்படும் கிரீம், உடலில் கலோரிகளை சட்டென்று அதிகரிக்கும். ஏனென்றால், சாக்லேட்டின் வழக்கமான க்ரீம், கணிசமான அளவு சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்றகொழுப்புகளுடன் க்ரீமும் சேரும்போது உடல் எடை அதிகரிப்பதைத் தவிர்க்கமுடியாது. எனவே சூடான சாக்லேட்டை உட்கொள்ளும்போது, அதன் அளவைக் குறைவாகவும், அதில் க்ரீம் சேர்க்காமல் இருப்பது என தேர்வில் கவனமாக இருக்க வேண்டும்.


மைதா உணவுகள்
குளிர்காலத்தில், குக்கீகள், கேக்குகள் என விதவிதமான பேக்கரி உணவுகள் பலராலும் விரும்பி உண்ணபடுகின்றன. இந்த வாய்க்கு சுவையான தின்பண்டங்களில் பெரும்பாலும் சர்க்கரைகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. அவற்றை அடிக்கடி உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். இதற்கு மாற்றாக, கோதுமை மாவு, தேன் அல்லது பேரீச்சம்பழம் போன்ற இயற்கை இனிப்புகள் மற்றும் கூடுதல் ஊட்டச்சத்துக்காக பழங்கள் அல்லது கொட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான பேக்கிங் தின்பண்டங்களை உண்ணலாம்.


மேலும் படிக்க | முதுமையை தடுக்கும் மிளகு.. உடலில் இத்தனை கோளாறுகளை நீக்குமா?


கிரீம் சூப்கள்
குளிர் காலத்தில் சூடான சூப்கள் சிறந்தவை. இருப்பினும், சில க்ரீம் சூப்களில் கிரீம், வெண்ணெய் மற்றும் அதிக சோடியம் உள்ளடக்கம் ஆகியவை இருக்கலாம், இதனால் அவை எடையை அதிகரிக்கும் . குறைந்த க்ரீம் மற்றும் ஆரோக்கியமான பொருட்களைக் கொண்ட காய்கறி சூப்கள் போன்ற இலகுவான சூப் விருப்பங்களைத் தேர்வு செய்யவும். நீங்கள் வீட்டில் சூப்களைத் தயாரிக்கிறீர்கள் என்றால், கலோரி உட்கொள்ளலைக் குறைக்க, குறைந்த கொழுப்புள்ள கிரீம் சேர்க்கவும்.


பொரித்த உணவுகள்
குளிர்காலத்தில் சூடான பூரி மசாலா, பக்கோடா, பஜ்ஜ்ஜி வடை என பொரித்த உணவுகள் அதிகமாக நம்மை ஈர்க்குக்ம். இவற்றில் கலோரிகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகமாக இருக்கலாம். பொரித்த உணவுகளை அடிக்கடி உட்கொள்வது எடை அதிகரிப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வறுத்த மற்றும் பொரித்த சிற்றுண்டிகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள். அதற்கு பதிலாக உங்கள் உணவில் அதிக புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


நொறுக்குத் தீனிகள்


குளிர்காலத்தில் அதிகமாக உணவுகளை உட்கொண்டால், எதிர்பாராத விதமாக எடை அதிகரிக்கும். அதேபோல, காரமான உணவுகள், சூடான உணவுகள் என குளிர்காலத்தில் உணவுகள் உண்பது வழக்கத்தை விட அதிகமாகிவிடுகிறது. எனவே, கலோரி குறைவான உணவுகளை உண்பதால் குளிர்காலத்தை மகிழ்ச்சியாகவும் உடல் எடையை அதிகரிக்காமலும் பராமரிக்கலாம். சமச்சீர் உணவுக்கு முன்னுரிமை கொடுக்கவும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பராமரித்தால் ஆரோக்கியமாக வாழலாம்.


(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | எச்சரிக்கை! நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்யும் ‘சில’ பழக்கங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ