சியா விதைகளை உட்கொள்வது உடல் எடையை குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சியா விதைகளை உரிய முறையில் பயன்படுத்தினால், செரிமான ஆரோக்கியம் அதிகரிக்கும். வளர்சிதை மாற்றத்தை மேம்பவதோடு, உடல் எடையும் கணிசமாக குறையும்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சியா விதைகள் சால்வியா ஹிஸ்பானிகாவின் சிறிய கருப்பு விதைகள் ஆகும், இது மத்திய மற்றும் தெற்கு மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். பார்ப்பதற்கு அளவில் சிறியதாக இருந்தாலும், சியா விதைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.


இதில், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், உணவு நார்ச்சத்து, புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் என பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ள ஆரோக்கிய விதை இது. உடல் பருமனை குறைக்க விரும்புபவர்களுக்கு சியா விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 


பழங்காலத்தில் இந்த சிறிய விதைகள் ஆற்றல் ஊக்கியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், போருக்குச் செல்லும் வீரர்களும், அதிக உடல் உழைப்பு கொண்டவர்களும் இதை உண்பார்கள் என்று சரித்திரம் கூறுகிறது.


மேலும் படிக்க | தாயின் ஆரோக்கியமே குடும்பத்தின் நிம்மதி: தாய்மார்களுக்கான சூப்பர் உணவுகள்


சியா விதைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கவும், வயதாவதை தள்ளிப்போடவும், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்களைத் தடுக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.


எடை இழப்புக்கு சியா விதைகள் 
சியா விதைகள் தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும், இது தசையை உருவாக்குவதற்கும், இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்துவதற்கும், கொழுப்பை எரிப்பதற்கும் இன்றியமையாதது.  கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது.


இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை உண்பது உங்களுக்கு கிட்டத்தட்ட 10 கிராம் நார்ச்சத்தை வழங்கும். நார்ச்சத்துள்ள உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால், பசி அதிகம் எடுக்காது.  


நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதோடு, குடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் அகற்றும். சியா விதைகளை சாப்பிடுவது, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்று கூறப்படுகிறது. உள்ளுறுப்புகளில் படிந்துள்ள கொழுப்புகளை கரைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | நீரிழிவையும், ரத்த அழுத்தத்தையும் போக்கு கீரைகளின் ராணி பரட்டை


அதிலும் குறிப்பாக தொப்பை கொழுப்பை சியா விதைகள் குறைக்கும் என்பதால் தொந்தியில்லா அழகான இடுப்பழகைப் பெறலாம். 


உடல் எடை இழப்புக்கு சியா விதைகளைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி


சியா விதைகளை இரவு முழுவதும் வைக்கவும். சியா விதைகளை முளை கட்டி பயன்படுத்தினால் அதன் ஊட்டச்சத்து மேலும் அதிகமகும். அதற்கு காரணம் செரிமானத் தடுப்பான்கள் தான். ஆனால், சியா விதைகளை ஊறவைக்காமல்/முளைக்க விடாமல் சாப்பிட்டாலும் உடல் எடை குறையும். 


ஆனால், உலர்ந்த சீயா விதையை உண்டால், அது உடலின் நீர்ச்சத்தை குறைத்துவிடும்.  


2 டேபிள் ஸ்பூன் சியா விதைகளை தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் அதை அப்படியே ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவது போலவும் சாப்பிடலாம். அல்லது பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சாலடாகவும் சாப்பிடலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நீரிழிவுக்கு குட்பை சொல்லி ரத்த அளவை சீராக்கும் கீரைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR