நீரிழிவுக்கு குட்பை சொல்லி ரத்த அளவை சீராக்கும் கீரைகள்

தினசரி உணவில் பச்சை இலைகளைக் கொண்ட காய்கறிகளை சாப்பிட்டால், டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து 14% குறையும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2022, 08:00 AM IST
  • டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து
  • நீரிழிவை கட்டுப்படுத்தும் காய்கறிகள்
  • முட்டைகோஸ் சூப் நீரிழிவுக்கு அருமருந்து
நீரிழிவுக்கு குட்பை சொல்லி ரத்த அளவை சீராக்கும் கீரைகள் title=

நீரிழிவு நோய் என்பது நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த நோயை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியமானது.

ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க நீரிழிவு நோயாளிகள் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நடைபயிற்சி என பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதற்காக தேர்ந்தெடுத்த உணவுகளையும், காய்கனிகளையும் சாப்பிட வேண்டிய அவசியம் சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ளது.

சுகாதார நிபுணர்களின் அறிவுரைப்படி, நீரிழிவு நோயாளிகள் அதிக நார்ச்சத்து உணவுகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை சீரான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட எடுக்கப்படும் முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரதமாகும் வெங்காயம்

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2030 ஆம் ஆண்டில், நீரிழிவு நோய் உலகின் 7 வது மிக ஆபத்தான நோயாக மாறும். லீசெஸ்டர் பல்கலைக்கழகம் சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி தினசரி உணவில் பச்சை இலைகளைக் கொண்ட காய்கறிகளை சாப்பிட்டால், டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து 14% குறையும். 

ஆரோக்கியம் மோசமடையாமல் இருப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு வரமாக இருக்கிறது சில கீரைகள். அவற்றில் சில, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் முக்கியமானவைகளான உள்ளன.

நீரிழிவு நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் 3 காய்கறிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திலும் வல்லவை.

மேலும் படிக்க | தாயின் ஆரோக்கியமே குடும்பத்தின் நிம்மதி: தாய்மார்களுக்கான சூப்பர் உணவுகள்

முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் நார்ச்சத்து நிறைந்த உணவாகும்.

vegetables

இந்த இலைகளை சமைப்பதற்கு முன் நன்கு கழுவவேண்டும். முட்டைகோஸை சூப்பாகவும் சாப்பிடலாம். சூப்பாக சாப்பிடும்போது, அதில் எண்ணெய் மற்றும் மசாலாக்கள் குறைவாக பயன்படுத்துவதால், அது நல்ல பலனளிக்கிறது. 

பரட்டைக் கீரை
பரட்டைக் கீரை என்பது மற்ற காய்கறிகளை விட இந்தியாவில் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படும் ஒரு கீரை ஆகும்.

vegetables

நார்ச்சத்து அதிகம் உள்ள இது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் அதிகரிக்காது. மேலும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கவும் உதவும்.

பாலக்
கீரைகளில் பாலக் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த பாலக் கீரை இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது.

vegetables

இதில் உள்ள மெக்னீசியம் நீரிழிவு நோயின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. பாலக் கீரையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயப்பவை.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News