ஒரே வாரத்தில் உடல் எடை குறைய... சியா விதைகளை இப்படி சாப்பிடுங்க போதும்
Weight Loss Tips: எடையை குறைக்கும் முயற்சியில் காலையில் உட்கொள்ளும் உணவு வகைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.
Weight Loss Tips: நம்மில் பலர் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால் இவற்றால் பெரிய அளவில் எந்த பலன்களும் கிடைப்பதில்லை. குறிப்பாக உடல் பருமனை சரி செய்ய, சிலர் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். எனினும், இத்தனை முயற்சிகளை எடுத்தாலும் பலருக்கு பெரிய அளவிலான பலன்கள் தெரிவதில்லை. குறிப்பாக, மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாலும், உணவில் கவனம் செலுத்த முடியாமல் போனால், எடை மிகவும் அதிகரிக்கும். எனவே, உடல் எடையை குறைக்க விரும்பினால், முதலில் உணவில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும். சில எளிய இயற்கயான முறைகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.
முக்கியமாக எடையை குறைப்பது மற்றும் தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைப்பது ஆகியவற்றில் நாம் எடுக்கும் முயற்சியில் காலையில் உட்கொள்ளும் உணவு வகைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. நீண்ட நேரம் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கும் உணவுகளை காலை வேளையில் சாப்பிட வேண்டும்.
எடை இழப்புக்கு சியா விதைகள் (Chia Seeds for Weight Loss):
உடல் எடையை குறைக்கும் காலை உணவுகளின் வரிசையில் சியா விதைகளுக்கு முக்கிய பங்குள்ளது. சியா விதைகளில் இருக்கும் நார்ச்சத்து நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கும். இது சில நாட்களில் உங்கள் எடையை குறைக்கும். எடை இழப்புக்கு சியா விதைகள் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் அதன் நன்மைகள் என்ன என்பதையும் இந்த பதிவில் காணலாம்.
சியா விதைகளின் பயன்கள் (Benefits Of Chia Seeds)
சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை நீங்கள் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், விரைவாக உடல் எடையை குறைக்கலாம். சியா விதைகளை உட்கொள்வது செரிமானத்தை மெதுவாக்குகிறது, இது இரத்தத்தில் குளுக்கோஸ் வெளியீட்டை தாமதப்படுத்தும். சியா விதைகள் உடலின் வளர்சிதை மாற்றத்தில் உதவுகிறது. இது பசியை குறைப்பதால், நாம் அவ்வப்போது தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இது உங்கள் எடையைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
மேலும் படிக்க | Pirola: உலகையே அதிர வைக்கும் புதிய கொரோனா வைரஸ்! இந்த அறிகுறிகள் இருக்கா?
உடல் எடையை குறைக்க சியா விதைகளை எவ்வாறு உட்கொள்வது? (How to use Chia Seeds for Weight Loss ?)
உங்கள் எடையை விரைவாகக் குறைக்க விரும்பினால், முதலில் 1 கிளாஸ் தண்ணீரில் 1 டீஸ்பூன் சியா விதைகளை கலந்து 10 நிமிடங்கள் அல்லது இரவு முழுவதும் அப்படியே விடவும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதன் மூலம் சில நாட்களில் உடல் எடையில் வித்தியாசத்தை பார்க்கலாம். நீங்கள் விரும்பினால், இந்த பானத்தில் எலுமிச்சை அல்லது தேனையும் சேர்க்கலாம். இதன் மூலம் இன்னும் சிறந்த நன்மைகள் கிடைக்கும்.
சியா விதைகள் விரைவாக உடல் எடையை குறைப்பதில் அதிக அளவில் நன்மை பயக்கும். இருப்பினும், இதை மட்டும் வைத்து உடல் எடையை குறைக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனுடன் உடற்பயிற்சி மற்றும் உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | யூரிக் ஆசிடை கட்டுப்படுத்தும் கிச்சன் கில்லாடி! மஞ்சளுக்கு மிஞ்சியது ஏதேனும் உண்டா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ