உணவு, உடை, உறைவிடம் தான் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்றாலும், அதில் முதலில் வருவது உணவு தான். உடையில்லாமல் கூட இருந்துவிடலாம், ஆனால் உணவில்லாமல் வாழ முடியுமா? நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்தின் அடிப்படை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும் குறிப்பாக, குழந்தைகளின் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இளம் வயதில் அவர்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து தான் அவர்களின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. எனவே, உங்கள் குழந்தையின் உணவுப் பழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். 


உங்கள் குழந்தைக்கு நல்ல கண் பார்வை கிடைப்பதற்கான உணவுகளை நீங்கள் தருகிறீர்களா என்று உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம். அப்படிச் செய்தால், கண் பார்வை பிரச்சனைகளைத் தவிர்ப்பதோடு, உங்கள் குழந்தைகள் பெரியவர்களானாலும் நல்ல ஆரோக்கியமான கண் பார்வையோடு இருப்பார்கள். குழந்தைகளின் கண் பார்வைக்கு ஒளியூட்டும் சில சத்தான உணவுகளின் தொகுப்பு இது…


Also Read | ஆண்மையை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட பீட்ரூட்


முட்டையில் இருக்கும் துத்தநாகம் மற்றும் லுடீன் போன்ற சத்துக்கள் கண் குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கும் கவசம் என்றே சொல்லலாம். இதனால் கண் பார்வை ஆரோக்கியமாக இருக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கண் பார்வைக்கு மிகவும் தேவையானது. இது ரெடினாவின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்குப் பெரிதும் உதவும். கண்கள் உலர்ந்து போவதைத் தடுக்கும் ஒமோகா-3 அமிலம் கடல் மீன்களில் உள்ளது.  


பச்சைக் கீரைகளில் உயிர்ச்சத்து சி மற்றும் இ சத்து நிறைந்துள்ளன. குறிப்பாகப் பொன்னாங்கண்ணி, முருங்கை, பசலை, புதினா போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது. இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வதால் கண் நோய்களை வரவிடாமல் தடுக்கலாம்.


மாம்பழம், ஆரஞ்சு, காரட்,எலுமிச்சை போன்ற பழங்களில் அதிக ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது. இதனால் பார்வை பிரகாசமடையும். இந்தப் பழங்களில் உயிர்ச்சத்து சி நிறைந்துள்ளதால் கண்களோடு இணைந்திருக்கும் மற்ற தசைகளும் ஊக்கம் பெறும். 


Also Read | சூப்பரான வெள்ளரிக்காய்ப் பாயசம் செய்வது எப்படி? இப்படித்தான்…


 நாவல் பழம் மற்றும் திரட்சைப்பழங்களில் ஆந்தோசையனின் அதிகம் உள்ளதால் இரவு நேரத்திலும், கண்பார்வை நன்றாகத் தெரியும். இந்தப் பழங்களில் உள்ள குரோசிடின், ரெஸ்வெராட்ரால், செலினியம், ஜின்க் ஆகியவை கண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பவை.


பால்,வெண்ணெய்,தயிர்,நெய்,பன்னீர் என்று அனைத்திலுமே ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது. அதேபோல், போதுமான அளவு தண்ணீர் கண் பார்வைக்கு இன்றியமையாதது. பல்வேறு கண் கோளாறுக்குக் கண்களின் ஈரப்பதம் குன்றுவதே காரணம். தினசரி 2 லிட்டர் தண்ணீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, கண்களுக்கும் கண்கண்ட மருந்து.


முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகளில் உள்ள விட்டமின் இ சத்து, குழந்தையின் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. பட்டாணி,மொச்சை மற்றும் அவரைக் கொட்டைகளில் பையோபிலவோனாய்ட் மற்றும் துத்தநாக சத்துகள் நிறைந்து உள்ளன.


Also Read | Ayurvedic Agni Tea: அக்னி தேநீர் இருக்கும்போது வேறு டீ எதற்கு?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR