Cholesterol Diet: கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த மேஜிக் பழங்களை உட்கொண்டால் போதும்
Fruits For Cholesterol Patients: கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க, குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதில் பழங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கான பழங்கள்: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை காரணமாக மக்கள் உடல் ரீதியான பல வித பிரச்சனைகளை சந்திக்கின்றனர். மன அழுத்தம், தவறான உணவு, ஜங்க் ஃபுட் போன்ற காரணங்களால் கொலஸ்ட்ரால் பிரச்சனையும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. மனித உடலில், அதாவது, இரத்தத்தில் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதத்தின் அளவு அதிகமாக இருந்தால், மாரடைப்பு ஆபத்து காலப்போக்கில் அதிகரிக்கும். அதை கட்டுக்குள் வைத்திருக்க, முதலில், கொலஸ்ட்ரால் உடலில் எங்கிருந்து வருகிறது என்பதையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு இரண்டு ஆதாரங்கள் உள்ளன: முதலில், நாம் உட்கொள்ளும் உணவு, இரண்டாவது, நமது கல்லீரல். கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க, குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதில் பழங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் எந்த பழங்களை சாப்பிட வேண்டும்?
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணம் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த உணவுகள், அதிக சர்க்கரை அளவு கொண்ட உணவுகள் மற்றும் குறைந்த நார்ச்சத்து உணவுகள் ஆகியவை ஆகும். அதே நேரத்தில், புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், உடற்பயிற்சியின்மை, உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்த சில மேஜிக் பழங்களை உணவில் சேர்க்க வேண்டும்.
1. சிட்ரஸ் பழங்கள்:
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. தீங்கு விளைவிக்கும் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கவும், ஆரோக்கியமான கொழுப்பை அதிகரிக்கவும் உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அவற்றில் உள்ளன. வைட்டமின் சி இதய நோய் மற்றும் இரத்த அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்கிறது. ஆகையால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இந்த பழங்கள் சாப்பிட வேண்டும்.
2. அவகேடோ:
அவகேடோ பழத்தில் மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. அவை இதயத்திற்கு நன்மை பயக்கும். அவகேடோ பழம் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) மற்றும் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரத கொழுப்பு அளவுகள் இரண்டையும் சமப்படுத்த முடியும்.
மேலும் படிக்க | நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க இவை அவசியம்: இன்றே உணவில் சேருங்கள்
3. நாவல் பழம்:
நாவல் பழத்தில் பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன. அவை உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும் கொழுப்பையும் கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. உங்கள் உணவில் நாவல் பழங்களை சேர்ப்பதன் மூலம், உங்கள் உடலின் ஆரோக்கியமான கொலஸ்ட்ராலை அதிகரிக்கலாம்.
4. வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பல தாதுக்களுடன் சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகள் நிறைந்துள்ளன. இது பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். வாழைப்பழம் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
5. நார்ச்சத்து உணவு:
கரையக்கூடிய நார்ச்சத்து கொண்ட, இதயத்திற்கு ஆரோக்கியமான பழங்கள் அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். மருத்துவ அறிவியலின் மொழியில் பெக்டின் எனப்படும் பழங்களில் கரையக்கூடிய நார்ச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் என நம்பப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த பழங்களில் ஆப்பிள் மற்றும் பேரிக்காய்களை தவறாமல் உட்கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வைட்டமின் பி12 குறைபாடு இருக்கா? சைவ உணவுக்காரர்களுக்கான அற்புதமான வழி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ