Climbing Stairs: மாரடைப்பை தடுக்க நாள் தோறும் படியேறுங்கள்..!!!
படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்ல உடற்பயிற்சி என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
Amazing benefits of climbing stairs: பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் சிரமப்பட்டு, அதிலிருந்து விடுபட அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். அதன் பிறகும் அவரது எடை குறையவில்லை. இதற்குக் காரணம் சில கெட்ட பழக்கங்களாக இருக்கலாம். சோம்பேறித்தனம் காரணமாக இருக்கலாம்.
தற்போது அப்பார்மெண்டுகள், அலுவலகங்கள் என அனைத்திலும் லிஃப் வசதி உள்ளது. அவசர வாழ்க்கை காரணமாக பலர் படிக்கட்டுகளில் ஏறுவதை விட லிஃப்டை பயன்படுத்துகின்றனர். ஆனால் படிக்கட்டுகளில் ஏறுவதால் உடல் எடை வேகமாக குறைவதோடு மட்டுமல்ல, வேறு பல நன்மைகளும் கிடைக்கும்.
படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்ல உடற்பயிற்சி என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். உடல் பருமனை வேகமாக குறைக்கவும் உதவுகிறது. படிக்கட்டுகளில் ஏறும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை விட்டுவிடாதீர்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் போதும், அலுவலகம் சென்றதும் லிப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைத் பயன்படுத்தவும்.
ALSO READ | Benefits of banana: வாழைப்பழம் சாப்பிட ஏற்ற நேரம் எது..!!!
படிக்கட்டுகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்
1. படிக்கட்டுகளில் ஏறுவதை வழக்கமாக்கிக் கொண்டால், உங்கள் இதயம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
2. தினமும் 7 நிமிடம் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறையும் என்கிறது ஓர் ஆய்வு.
3. இது உயர் இரத்த அழுத்த அபாயத்தையும் நீக்குகிறது.
4. நீங்கள் தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறினால், விரைவாக உடல் எடையை குறைக்க உதவும்.
5. தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால், ஒருவரின் இறப்பு விகிதத்தை 33 சதவீதம் குறைக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு.
ஆரம்பத்தில், படிக்கட்டுகளில் ஏறும் போது சோர்வாக இருக்கலாம், மூச்சுத் திணறலும் ஏற்படலாம், ஆனால் அதனை தொடர்ந்து செய்து வந்தால், மூச்சு வாங்குதல், திணறுதல் போன்றவை இருக்கவே இருக்காது.
ALSO READ | Viagra: ஆண்மை குறைவு பிரச்சனையை தீர்க்கும் வயாகரா, அல்சைமர் நோயை தடுக்கிறது
படிக்கட்டுகளில் ஏறும் போது சில முன்னெச்சரிக்கைகளை கடைபிடியுங்கள்
1. மிதமான வேகத்தில் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்குங்கள்.
2. படிக்கட்டுகளில் ஏறும் போது முதுகு நேராக இருக்க வேண்டும்.
3. முதலில் 20 அல்லது 25 படிக்கட்டுகளில் 5 தடவை ஏறி இறங்கலாம்.
நீங்கள் ஏறக்கூடிய படிக்கட்டுகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்கவும்.
கால்களில் பாதிப்பு ஏதும் ஏற்படுவதை தவிர்க்க பொருத்தமான காலணிகளை அணியுங்கள்.
( பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது)
ALSO READ | Brain Health: இந்த ‘5’ உணவுகள் மூளையை டேமேஜ் செய்யும்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR