தாய் பாலின் சத்துக்கள் நிறைந்திருக்கும் ‘இதயத்திற்கு’ இதமான தேங்காய்!
தாய் பாலின் சத்துக்கள் நிறைந்த தேங்காயை தினமும் அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சீமர் நோய் (Alzheimer`s disease) குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தென்னிந்திய உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தேங்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. உங்களை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்திருக்க தேங்காய் மிகவும் உதவுகிறது. தேங்காயில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் உடலின் ஈரப்பதத்தையும் பாதுகாக்கிறது. தேங்காயுடன், அதன் எண்ணெயும் மிகவும் அற்புதமானத பலன்கள் கொண்டது. அதனால் தான் நம் முன்னோர்கள் உணவில் அதிக அளவில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தினர். தேங்காய் எண்ணையினால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. தினமும் அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சீமர் நோய் (Alzheimer's disease) குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேங்காய் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. காரணம் தேங்காயில் உள்ள நிறைவுறு கொழுப்பு அமிலங்கள், மற்ற நிறைவுறு கொழுப்புகளை போல் இல்லாமல் அதில் உள்ள சங்கிலி தொடர் நடுத்தரமான அளவில் உள்ளது. இந்த கொழுப்பு சங்கிலி தொடர் எளிதில் உடைந்து கொழுப்புகள் அதிகமாக உடலில் தங்குவதில்லை. எனவே அதிக கொலஸ்ட்ரால் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
தேங்காய் ஒரு சிறந்த ஆண்டிபயாடிக். இது உங்களை அனைத்து வகையான ஒவ்வாமைகளிலிருந்தும், அதாவது அலர்ஜியில் இருந்தும் பாதுகாக்கிறது.
மலச்சிக்கல் பிரச்சினையிலும் தேங்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தேங்காயில் அதிக நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் மலச்சிக்கலை போக்கும். வயிற்றில் பூச்சிகள் இருந்தால், இரவில் தூங்குவதற்கு முன்னும், காலையில் ஒரு ஸ்பூன் தேங்காயை எடுத்துக்கொண்டால், பூச்சிகள் இறக்கின்றன. தேங்காயில் வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கும் மோனோ லாரின் உள்ளது.
தேங்காய் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. ஏனென்றால், தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் காப்ரிக் அமிலம் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. இது நோய்களுக்கு எதிராக போராடும் திறனை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ