தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. ஆனால், அந்த முட்டையில் புரதம் மிக குறைவாக இருந்தால், ஆரோக்கிய பலன்களை பெற இயலாது. ஆனால், முட்டையின் நிறத்தை வைத்து அதில் புரதம் குறைவாக உள்ளதா அல்லது அதிகமாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முட்டையின் உள்ளே இருக்கும் மஞ்சள் கரு முட்டையின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்கிறது. முட்டையின் மஞ்சள் கருவின் நிறத்தைப் பார்த்தால், முட்டையிட்டது ஆரோக்கியமான கோழியா அல்லது ஆரோக்கியமற்ற கோழியா என்பதை அறியலாம். அதன் மூலம் முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது என்று சொல்லலாம். புரதத்தைத் தவிர, முட்டை பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது, இது ஒரு சூப்பர் புட்  என்றால் மிகையில்லை.


சந்தையில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விலையில் முட்டைகள் உள்ளன. அதன் தரவும் வெவ்வேறாக உள்ளன. முட்டையை உடைக்கும் போது அதனுள் இருக்கும் மஞ்சள் கரு முக்கியமாக மூன்று வகையாக இருக்கும். ஆரஞ்சு, வெளிர் ஆரஞ்சு அல்லது மஞ்சள். இதில், ஆரஞ்சு மஞ்சள் கருவுடன் கூடிய முட்டை மிகவும் ஆரோக்கியமானது மற்றும் அதில் உள்ள புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகமாக உள்ளது.


ALSO READ | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!


முட்டையின் மஞ்சள் கருவில் ஏன் வேறுபாடு உள்ளது?


மற்ற கோழிகளை விட இயற்கை சூழலில் வளர்க்கப்படும் கோழிகள் ஆரோக்கியமானவை என உணவு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கோழிகளுக்கு போதுமான அளவு சூரிய ஒளி, சரிவிகித உணவு ஆகியவை கிடைக்கும். இந்தக் கோழிகளின் முட்டையின் மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இது தவிர, வெளிர் ஆரஞ்சு நிற கரு கொண்ட முட்டையும் சற்று ஆரோக்கியமானது. இருப்பினும், மஞ்சள் நிற கரு கொண்ட முட்டைகள் நோய்வாய்ப்பட்ட அல்லது ஆரோக்கியமற்ற கோழிகளின் முட்டைகளாக இருக்கலாம்.


ALSO READ | Brain Health: இந்த ‘5’ உணவுகள் மூளையை டேமேஜ் செய்யும்..!!!


முட்டையின் ஆரோக்கிய நன்மைகள்: முட்டை முட்டை ஆரோக்கியத்திற்கான ஒரு சூப்பார் புட். முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


1. முட்டை புரதம் நிறைந்த உணவாகும், இது தசைகளுக்கு தேவையான புரதத்தை வழங்குகிறது.


2. முட்டையில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால், இதய நோய்களில் இருந்து பாதுகாப்பதில் பங்கு வகிக்கிறது.


3. முட்டையில் கோலின் என்ற சத்தும் உள்ளது. இந்த ஊட்டச்சத்து மூளைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


4. முட்டை சாப்பிடுவதால் கண்களும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில், இதில் கண்களுக்கு நன்மை செய்யும் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.


5. முட்டை சாப்பிடுவதும் உடல் எடையை குறைக்க உதவும். ஏனெனில், நீண்ட நேரம் வயிற்றை நிரம்ப வைத்து, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணும் வாய்ப்பைக் குறைக்கிறது.


ALSO READ | Benefits of banana: வாழைப்பழம் சாப்பிட ஏற்ற நேரம் எது..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR