Hair Fall Remedies In Tamil: முடி கொட்டுவதை நினைத்து கவலைப்படுகிறீர்களா... தலைமுடியை சீவுவதற்காக தனி சீப்பு, தலையணை வாங்கிவைத்து பார்த்து பார்த்து பல விஷயங்களை செய்தாலும் தொடர்ந்து முடி கொட்டுவதாக மன வருத்தம் அடைக்கிறீர்களா... நீங்கள் இந்த தகவல்களை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். தலைமுடி உதிர்வதற்கு உங்களின் உணவுப்பழக்கவழக்கமும் ஒரு பங்கை ஆற்றும். நீஹ்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சரியான நேரத்தில் உட்கொண்டு, சரியான வாழ்க்கை முறையை பின்பற்றும்பட்சத்தில் தலைமுடி மிருதுவாகவும், ஆரோக்கியமாகும் வளரும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, குளிர்காலத்திற்கு என நீங்கள் உங்களின் உணவுப்பழக்கவழக்கத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் வலுபெறும், தலைமுடி பிரச்னையும் இருக்காது. தலைமுடி மெலிதாவது, அதிகமாக கொட்டுவது போன்ற பிரச்னைகளை தீர்க்க இந்த நான்கு உணவுகளை தினமும் சாப்பிடுங்கள். இதனால் உங்கள் தலைமுடி சரியான ஊட்டத்தை பெற்று வலுவாக வளரும். குளிர்காலத்திற்கு எனவும் சில தலைமுடி சார்ந்த பிரச்னை வரும். 


தலைமுடி எளிதில் காய்ந்துவிடும், குளிர்ந்த காலநிலை உங்கள் தலைமுடியை எளிதில் உலர்த்திவிடும். உச்சந்தலையில் இருந்து இயற்கை எண்ணெய்கள் மற்றும் ஈரப்பதத்தையும் அகற்றும். இது உங்கள் கூந்தலை வலுப்படுத்தவும், ஈரமாகவும் வைத்திருக்கும். எனவும் இந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொள்வதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


நட்ஸ் மற்றும் விதைகள்


பாதாம், பிஸ்தா, சூரியகாந்தி விதைகள், சியா விதைகள், முந்திரி ஆகியவற்றை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் E, துத்தநாகம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் ஊட்டமளிக்கக் கூடியவை.


மேலும் படிக்க | எச்சரிக்கை... மீண்டும் சூடு படுத்தினால் விஷமாகும் சில உணவுகள்


பச்சிலை காய்கறிகள்


வெந்தய தாள்கள், கீரைகள், கடுகு இலைகள் போன்ற பச்சிலைகளை ஒருநாள் விட்டு ஒருநாளாவது எடுத்துக்கொள்ளுங்கள். இதில் வைட்டமிண் A மற்றும் C ஆகியவை தலையில் உள்ள இயற்கையான எண்ணெய்யை சுரக்க உதவும். இது தலையை ஈரப்பதத்துடன் காய்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும். இரும்புச்சத்தும் இவற்றில் அிகம் இருப்பதால் ரத்த ஓட்டமும் சீராகும். ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான தலைமுடியை பெறுவீர்கள். 


பழங்கள்


தினமும் வகை வகையாக பழங்களை சாப்பிடுவது நல்ல பழக்கமாக பார்க்கப்படுகிறது. அதிலும் ஸ்ட்ராபெரீஸ், ப்ளூபெரீஸ், மாதுளை, அவகாடோ, கிவி, ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமிண் சி ஆகியவை நிறைந்திருக்கின்றன. இது தலைமுடியை மிருதுவாக்கி, பளபளப்பாகவும் வைக்கும். 


பருப்பு வகைகள்


சோயாபீன்ஸ், கொண்டைகடலை போன்ற பருப்பு வகைகளை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இதில் புரதச்சத்து நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, தலைமுடி கற்றையாக வளரும் உதவுபுரியும்.


(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள், ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் தலைமுடி சார்ந்த நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)


மேலும் படிக்க | Lungs Detox: நுரையீரலில் சேரும் நச்சுகளை நீக்கி டீடாக்ஸ் செய்யும் ஆரோக்கியமான பழங்கள்
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ