Coriander Powder: சுவையான கொத்தமல்லி பொடி செய்வது எப்படி
கொத்தமல்லி (தனியா) பொடி உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும்.
இன்றைய கால சூழலில் சர்க்கரை நோய் அதிகமாக காணப்படுகிறது. தனியா (மல்லி) பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல ஆராய்சிகள் கூறுகிறது. மிகவும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி (தனியா) பயன்படுகிறது.
சால்மோனெல்லா பாக்டீரியா (Bacteria) உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும். உங்கள் உணவுகளில் கொத்தமல்லி (Coriander) போன்ற ஆரோக்கியமான மசாலாக்களை சேர்த்தால் இவ்வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். இத்தனை நன்மைகள் கொண்டுள்ள தனியா (கொத்தமல்லி) பொடியை வீட்டிலேயே எவ்வாறு செய்வது என்று பார்போம்.
ALSO READ | தினமும் கொத்தமல்லி இலையை ஜூஸ் செஞ்சு குடிச்சா இந்த பிரச்னையே வராது
தனியாப் பொடி செய்முறை:
கொத்தமல்லி - 2 கப்
சிவப்பு மிளகாய் - 10
சீரகம் - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
மிளகு - 1/2 கப்
கருவேப்பிலை - 1/2 கப்
கடலை பருப்பு - 1/2 கப்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
* கொத்தமல்லி, சிவப்பு மிளகாய் ஆகிய இரண்டையும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
* பின்னர் கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, உளுந்து, சீரகம், மிளகு, பெருங்காயம் ஆகியவற்றையும் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
* பின்னர் தண்ணீர் சேர்க்காமல் கொத்தமல்லி, சிவப்பு மிளகாயை முதலில் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
* பின்னர் கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, உளுந்து, சீரகம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொண்டால் கொத்தமல்லி பொடி ரெடி.
ALSO READ | சமையலறையில் உள்ள மசாலாக்களின் கலவை மிகவும் ஆரோக்கியமானது: ஆய்வு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR