புதுடெல்லி: Corona Virus காலத்தில் யார், எங்கே சென்றாலும் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்கள் உடல் வெப்பநிலையை சரிபார்ப்பதை சிலர் எதிர்க்கிறார்கள்.  Thermometerகளை நெற்றியில் வைத்து சோதனை செய்வதற்கு பதிலாக சிலர் அதை தங்கள் கைகளில் வைத்து வெப்பநிலையை சரிபார்க்க வலியுறுத்துகிறார்கள்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகளில் உடல் வெப்பநிலை ஸ்கேன் செய்வது அவசியமானது என்பது அனைவருக்கும் தெரியும். இது தொடர்பாக பலருக்கும் பல சந்தேகங்களும், ஊகங்களும் இருக்கின்றன.  அவற்றை சரியாக தெரிந்துக் கொள்வோம். 


US FDA மற்றும் ICMR வழிகாட்டுதல்களின்படி, வெப்பநிலையை எடுத்துக்கொள்வதற்கான சரியான வழி அவற்றை நெற்றியில் வைத்துப் பார்ப்பதேயாகும். Non-Contact Infra-Red Thermometerகள் முற்றிலும் பாதுகாப்பானவை மற்றும் அவற்றை நெற்றிக்கு அருகில் கொண்டு சென்று பார்ப்பதால்  எந்தவொரு சுகாதார ஆபத்தும் ஏற்படாது.
 
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக பகிரப்படும் தேவையற்ற வாட்ஸ்அப் வீடியோக்களும், அங்கீகரிக்கப்படாத அறிக்கைகளும் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. ஆனால் அவற்றை நம்பிக் கொண்டு சிலர், அலுவலகங்களிலோ அல்லது வெளியிடங்களிலோ செய்யப்படும் வெப்பநிலை ஸ்கேனிங்கை எதிர்க்கிறார்கள்.


Read Also | உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி சாதனை படைத்த இந்தியா!!!
 
சந்தேகம் 1- நெற்றியில் சுட்டிக்காட்டும்போது தெர்மோமீட்டரின் முனையில் இருந்து வெளியாகும் கதிர்கள்  மூளையை சேதப்படுத்துமா?


பதில் -  வெப்பமானி என்று தமிழில் அழகாக அழைக்கப்படும் Thermometerஇன் முனையானது எந்தவிதமான கதிர்வீச்சையும் வெளியிடுவதில்லை. இவை உடலிலிருந்தோ அல்லது வேறு எந்த சாதனத்திலிருந்தோ வரும் வெப்பத்தைக் கண்டறியும் வேலையை மட்டுமே செய்கிறது.


சந்தேகம் 2- Thermometerஐ ஏன் கையில் பயன்படுத்துவதை எதிர்க்கிறாUS FDA மற்றும் ICMR வழிகாட்டுதல்களின்படி, வெப்பநிலையை எடுத்துக்கொள்வதற்கான சரியான வழி அவற்றை நெற்றியில் வைத்துப் பார்ப்பதேயாகும். ர்கள்?


பதில் - கொரோன பரவலும் தாக்கமும் தொடங்கிய பிறகு அனைவரும் பல முறை கைகளைக் கழுவுவதோடு, ஆல்கஹால் கலந்த sanitiserகளையும் பயன்படுத்துகிறார்கள். இதனால், உடலின் வெப்பநிலை கைகளில் மாறுபடலாம். இதனால், துல்லியமான உடல் வெப்பத்தைத் தெரிந்துக் கொள்ள முடியாது.  


சந்தேகம் 3- இந்த வெப்பமானிகளின் முனைகள் தீங்கு விளைவிக்கும் laser கதிர்களை வெளியிடுகின்றனவா?


பதில் - இது ஒரு சென்சார் மட்டுமே. இது உடல் வெப்பத்தை கண்டறிகிறது. Thermometerஇல் லேசர் கதிர்களை உமிழும் சாதனம் ஏதும் பொருத்தப்படுவதில்லை. இந்த சாதனங்கள் பிறந்தக் குழந்தைக்கு கூட முற்றிலும் பாதுகாப்பானவை. நோயாளிகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் வெப்பநிலையைப் பதிவு செய்ய உலகளவில் மருத்துவ நிபுணர்கள் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.


சந்தேகம் 4- COVID-19ஐ பரப்ப இந்த non-contact thermometers உதவுமா?


பதில் - அனைத்து உபகரணங்களும் ஒரு நாளில் பல முறை சுத்தப்படுத்தப்படுகின்றன. அதைப் பயன்படுத்தும் நபரும் முழுமையாக ஸ்கேன் செய்யப்படுகிறார். எனவே இதுபோன்ற விஷயங்களுக்கு பயம் இல்லை.


எனவே, அனைவரும் அச்சமின்றி உடல் வெப்பநிலையை பரிசோதித்துக் கொள்ளலாம். கொரோனா போன்ற பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்றுக் கொண்டு நோயின்றி நிம்மதியாக வாழ்வோம்.


Read Also | September 15: சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR