இளைஞர்களோ, வயதானவர்களோ பொறுப்பற்றவர்களால் தான் நாட்டில் COVID-19 தொற்று பரவி வருகிறது
`இளைஞர்கள் அல்லது வயதானவர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் பொறுப்பற்றவர்களாகவும், முகமூடிகள் அணியாமல் இருப்பவர்களால் இந்தியாவில் அதிக அளவில் தொற்றுநோய் உண்டாகிறது`
புது டெல்லி: இந்தியாவில் முகமூடி அணியாதவர்களுக்கு கோவிட் -19 தொற்றுநோய் வருகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர் -ICMR) நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
"இளைஞர்கள் அல்லது வயதானவர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் பொறுப்பற்றவர்களாகவும், முகமூடிகள் அணியாமல் இருப்பவர்களால் தான் இந்தியாவில் அதிக அளவில் தொற்றுநோய் உண்டாகிறது" என்று ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் (டாக்டர்) பால்ராம் பார்கவா (Balram Bhargava) கூறினார்.
நாட்டில் கொரோனாவுக்கு எதிரான மூன்று தடுப்பூசி முன்னணியில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
இது தவிர, இந்தியா தனது கோவிட் -19 தடுப்பூசியின் வளர்ச்சியையும் அதிகரித்துள்ளது என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தற்போது மூன்று COVID-19 தடுப்பூசிகள் "இந்தியாவில் பந்தயத்தில் முன்னணியில் உள்ளன" என்று டாக்டர் பார்கவா கூறினார்.
சீரம் இன்ஸ்டிடியூட் (Serum Institute) தடுப்பூசி கட்டம் 2 (பி) மற்றும் 3 ஆம் கட்ட சோதனைகளில் உள்ளது மற்றும் பாரத் பயோடெக் (Bharat Biotech) மற்றும் ஜைடஸ் காடிலாவின் (Zydus Cadila) தடுப்பூசிகள் கட்டம் 1 சோதனையை முடித்துவிட்டதாக டாக்டர் பார்கவா தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் நோயால் 60,975 பேருக்கு புதிதாக தொற்று பரவியுள்ளது. இதன் மூலம், நாட்டில் தொற்றுநோயின் எண்ணிக்கை 31,67,323 ஆக உயர்ந்தது.
இறப்பு எண்ணிக்கை 58,390 ஆக உயர்ந்தது. 24 மணி நேரத்தில் 848 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக (Union Health Ministry) தகவல்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
ALSO READ | 'தடுப்பூசி தேசியவாதத்தால்' கொரோனாவை வெல்ல முடியாது: எச்சரிக்கும் WHO
இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தை தாண்டியுள்ளது. ஐசிஎம்ஆரின் கூற்றுப்படி, மொத்தம் 3,68,27,520 மாதிரிகள் ஆகஸ்ட் 24 வரை சோதனை செய்யப்பட்டுள்ளன. 9,25,383 மாதிரிகள் திங்களன்று சோதனை செய்யப்பட்டது.