COVID-19 Update: புதிய பாதிப்புகள் 74,442; மொத்த பாதிப்புகள் 66 லட்சத்தை தாண்டியது
இந்தியவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று, 74,442 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63 லட்சசத்தை தாண்டியுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, திங்கள்கிழமை (அக்டோபர் 5, 2020) 66 லட்சத்தை தாண்டியது, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 74,442 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 66,23,816 ஆக உள்ளன. இதில் 9,34,427 பேர் ஆக்டிவ் நோயாளிகள். 55,86,704 பேர் குண்மடைந்துள்ளனர் என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
ALSO READ | பாவங்களை போக்கும் கங்கை கொரோனாவையும் போக்குமா... நிபுணர் குழு ஆய்வு..!!!
இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,02,685 ஆக உயர்ந்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 903 இறப்புகள் பதிவாகியுள்ளன.
அக்டோபர் 4 வரை இந்தியாவில் மொத்தம் 7,99,82,394 பேருக்கு கோவிட் -19 பரிசோதனை செய்யப்பட்டது என்றும், 9,89,860 பேருக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது என்றும் ஐசிஎம் ஆர் கூறுகிறது.
தமிழ்நாட்டில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 46,120 ஆக உள்ளது. இது மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,644,092 ஆகும்.
இந்தியாவின் கோவிட் -19 பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும் தாண்டியது. செப்டம்பர் 16 அன்று 50 லட்சத்தை தாண்டி செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தை தாண்டியது.
ALSO READ | நமக்கு ஏன் வியர்க்கிறது... வியர்வைக்கும் நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe