புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  81.84 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு நாளில்,  46,963 புதிய நோய்த்தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு மொத்த எண்ணிக்கை  81,84,082 ஆக உள்ளது என சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளில்,  74,91,513 பேர் குணமடைந்துள்ளனர். 5,70,458 பேர் ஆக்டிவ் நோயாளிகள் ஆவர். COVID-19 ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக 6 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. 470 புதிய இறப்புகளுடன், இறந்தவர்களின் எண்ணிக்கை 1,22,111 ஆக உயர்ந்தது என்று அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.


470 புதிய இறப்புகளில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 74 பேரும், சத்தீஸ்கரைச் சேர்ந்த 63 பேரும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 57 பேரும், டெல்லியைச் சேர்ந்த 41 பேரும், தமிழ்நாட்டை சேர்ந்த 31 பேரும் அடங்குவர்.


தேசிய அளவில் குணம்டையும் விகிதம் 91.54 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.


COVID-19 காரணமாக ஏற்படும் புதிய நோய்த்தொற்றுகள் அக்டோபர் முதல் வாரத்திலிருந்து படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளன.


அக்டோபரில் மொத்தம் 18,71,498 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது கடந்த மாதம் இந்த எண்ணிக்கை 26,21,418 என்ற அளவில் இருந்தது. இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள வைரஸ் தொற்றுநோய்களின் மொத்த பாதிப்புகளில், இது சுமார் 22.87 சதவீதமாகும் என்று பி.டி.ஐ தனது அறிக்கையில் கூறியுள்ளது.


மேலும் படிக்க | Uniform Civil Code: பிரான்சிலிருந்து இந்தியா வரை வலுக்கும் கோரிக்கை..!!!


கடந்த மாதத்தில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 23,433. இதுவரை பதிவான மொத்தம் 1,22,111 இறப்புகளில் இது 19.19 சதவீதம் ஆகும்.


இந்தியாவின் கோவிட் -19 தொற்று எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும் கடந்தது. அக்டோபர் 29 அன்று 80 லட்சத்தை தாண்டியது.


அக்டோபர் 31 வரை மொத்தம் 10,98,87,303 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை 10,91,239 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐ.சி.எம்.ஆர் (ICMR)  கூறியுள்ளது.


மேலும் படிக்க | கொரோனாவிலும் 45,000 கோடி அன்னிய முதலீட்டை ஈர்த்து அசத்தும் முதல்வர் யோகி..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR