இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 3,86,452 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பாடுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை அடுத்து, நாட்டின் மொத்த COVID-19 தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 1.87 கோடியாக (1,87,62,976) அதிகரித்துள்ளது, அவற்றில் 30.79 லட்சம் (30,79,308) சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இறப்புகள் 2.08 லட்சம் (2,08,330) என்ற அளவில் உள்ளது.


பிப்ரவரி மாத இறுதியில் இருந்து இந்தியா அதன் மொத்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை சுமார் 77 லட்சம்  அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தியாவில் தொற்று பாதிப்பு இந்த அளவை எட்ட கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆனது.



மறுபுறம், கிட்டத்தட்ட 1.3 கோடி இந்தியர்கள் புதன்கிழமை (ஏப்ரல் 28) அன்று,அரசாங்கத்தின் பிரத்யேக போர்டல் கோவின் CoWin தளத்தில் தடுப்பூசி பெற தங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொண்டனர்.


இருப்பினும், ஒரே நேரத்தில் பல பதிவு செய்ய முயன்றதால், கோவின் போர்ட்டலில், சில தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டது. பலர் பதிவு செய்ய இயலவில்லை என புகார் செய்தனர். 


கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுக்கு உதவி பொருட்களை அனுப்புகின்றன.


ALSO READ | அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு ‘ஆயுஷ்-64’ மருந்து சூப்பர் பவர்...


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR