புதுடெல்லி: அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ‘ஆயுஷ்-64’ மருந்து நல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.
ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி என இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் இணைந்தது ‘ஆயுஷ்’ துறை ஆகும். மத்திய அரசில் ஆயுஷ் துறைக்கென தனி அமைச்சகம் உள்ளது.
மத்திய ஆயுஷ்அமைச்சகத்தின் தலைமை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் சோப்ரா நேற்று இணையவழியில் பேட்டி அளித்தார். அதில் அவர், அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ‘ஆயுஷ்-64’ மருந்து நல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
கடந்த 1980-ம் ஆண்டு, மலேரியாவை குணப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டது ‘ஆயுஷ்-64’ அந்த மருந்து, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுமா என்று அண்மையில் 3 மையங்களில் பரிசோதனை நடத்தப்பட்டது.
Also Read | 18+ கோவிட் தடுப்பூசிகளுக்கு சிக்கல்; கையறு நிலையில் மருத்துவமனைகள்!
லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம், வார்தாவில் உள்ள தத்தா மேகே மருத்துவ அறிவியல் நிலையம், மும்பையில் உள்ள மாநகராட்சி கொரோனா மையம் ஆகிய மையங்களில் தலா 70 நோயாளிகளை பயன்படுத்தி இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.
வழக்கமான கவனிப்புடன் ‘ஆயுஷ்-64’ மருந்தை கொடுத்தால், அறிகுறி இல்லாத, லேசான, மிதமான கொரோனா பாதிப்புடையவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது என தற்போது அறியப்பட்டுள்ளது.
பொது சுகாதாரம், களைப்பு, கவலை, மன அழுத்தம், பசி, மகிழ்ச்சி, தூக்கம் போன்ற சிக்கல்களுக்கும், ‘ஆயுஷ்-64’ மருந்து முக்கியத்துவம் வாய்ந்த, நல்ல விளைவுகளை அளிப்பதும் உணரப்பட்டது.
Also Read | கோவிட் நோயாளிகளுக்கு மூன்றடுக்கு மருத்துவ முகக்கவசம் அவசியம்
கொரோனா விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட தேசிய நிபுணர் குழுவும் ‘ஆயுஷ்-64’ மருந்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த மருந்தை லேசான கொரோனா பாதிப்பு கொண்டவர்களுக்கு பயன்படுத்த சிபாரிசு செய்துள்ளது. இதுவரை இம்மருந்து பாதுகாப்பானது என்றே முடிவுகள் வந்துள்ளன.
இருப்பினும், ஆக்சிஜன் பயன்படுத்தும் அளவுக்கு நோய் தீவிரம் அடைகிறதா என்பதை அறிய ‘ஆயுஷ்-64’ மருந்து பயன்படுத்திய நோயாளிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
Also Read | Isha Mahasivarathri: இந்த ஆண்டு ஆன்லைன் வாயிலாக கலந்து கொள்ளுங்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR