90 நிமிடங்களில் COVID result: புதிய பரிசோதனை செயல்முறையை அறிமுகப்படுத்தியது Tata Group!!
டாடா மெடிக்கல் அண்ட் டையக்னாஸ்டிக்ஸ் லிமிடெட் திங்களன்று COVID-19 க்கான புதிய நோயறிதல் பரிசோதனையை அறிமுகப்படுத்தியது.
டாடா மெடிக்கல் அண்ட் டையக்னாஸ்டிக்ஸ் லிமிடெட் (TataMD) திங்களன்று COVID-19 க்கான புதிய நோயறிதல் பரிசோதனையை அறிமுகப்படுத்தியது. இது தற்போதுள்ள பரிசோதனை முறையை விட மிகவும் திறமையானது மற்றும் எளிமையானது என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த முறை நாடு முழுவதும் பெரிய அளவில் சோதனையை அதிகரிக்கும் திறன் கொண்டது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
90 நிமிடங்களுக்குள் இறுதி முடிவை வழங்கக்கூடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பரிசோதனை கிட்டுகள், தென்னிந்தியாவில் சென்னையில் உள்ள டாடாவின் (Tata) ஆலையில் தயாரிக்கப்படும். இது ஒரு மாதத்திற்கு 1 மில்லியன் சோதனை கருவிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்று கிருஷ்ணமூர்த்தி ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
இந்தியா (India) முழுவதும் சோதனை கிட்கள் கிடைக்க, நிறுவனம் மருத்துவமனைகள், நோயறிதல் நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களுடன் கூட்டாண்மைக்காகப் பேசி வருகிறது. மேலும் அதன் சென்னை தொழிற்சாலையில் மாதத்திற்கு 10 லட்சம் யூனிட் என்ற அளவில் உற்பத்தியைத் தொடங்க நிறுவனம் தயாராக உள்ளது.
ALSO READ: உச்சியில் COVID-ன் மூன்றாவது அலை, ஒரே நாளில் 7745 பேர் பாதிப்பு: பீதியில் மக்கள்!!
"முழுமையான பரிசோதனை அனுபவத்தை வழங்கும் ஒரு தீர்வை நாங்கள் கண்டுள்ளோம். சோதனையை மிகவும் திறமையாகவும் நம்பகத்தன்மையுடனும் அளவிடக்கூடியதாகவும் ஆக்குகிறோம். இது அதிக அணுகலையும் கிடைக்கும் தன்மையையும் உருவாக்குகிறது. மேலும், இது முழுவதுமாக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது" டாடா மெடிக்கல் மற்றும் டயக்னாஸ்டிக்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி பி.டி.ஐ-யிடம் தெரிவித்தார்.
ஜூன் மாதத்தில், சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பி, கோவிட் -19 வைரஸைக் கண்டறிய ஒரு பெரிய செயல்முறையைக் கொண்டு வந்தது. இது FELUDA எனப்படும் ஒரு தளத்தில் மரபணு உணர்திறன் மூலம் சமீபத்திய சி.ஆர்.எஸ்.பி.ஆர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொற்றை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் COVID-19 தொற்று எண்ணிக்கை 45,903 அதிகரித்து மொத்தம் 8.55 மில்லியனாக உயர்ந்துள்ளது. இறப்புகள் 490 அதிகரித்து 126,611 ஆக அதிகரித்துள்ளன என்று அரசாங்க தகவல்கள் திங்களன்று தெரிவித்தன.
ALSO READ: Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR