லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (LNJP) மருத்துவமனையிலும், ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையிலும் ப்ளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளதாக தில்லி முதலவர் அர்விந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தில்லியில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக, தில்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜரிவால் குறிப்பிட்டார். நோயாளிகள் தங்களது ஆக்ஸிஜன் அளவை கணக்கிடும் ஆக்ஸிமீட்டர்களை வழங்குவது மற்றும் ப்ளாஸ்மா சிகிச்சையை அறிமுகப்படுத்துவதன் மூலம் நோயாளிகள் விரைவில் குணமடைய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.


ALSO READ | தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு?... மருத்துவ குழுவுடன் EPS ஆலோசனை..!


பரிசோதனை அளவு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், அதனுடன் ஒப்பிடும் போது, நாள் ஒன்றுக்கு 3000 தொற்றுகள் என்ற அளவில் மட்டுமே அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். சுமார் 45 ஆயிரம் கோவிட்-19 (Covid-19) நோயாளிகள்  குணமடைந்துள்ளாகவும் தில்லி முதல்வர் கேஜரிவால் கூறினார். LNJP மருத்துவமனையில், ப்ளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்ட பிறகு, முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில், இந்த நோயொனால் இறப்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது என்றார்.


தொற்று தீவிரமாக உள்ள அல்லது கொரோனாவினால்  உடல் நிலை மோசமாகியுள்ள நோயாளிகளை, ப்ளாஸ்மா சிகிச்சையின் மூலம் காப்பாற்றுவது கடினம் என்றாலும், மிதமான தொற்று உள்ள நோயாளிகளின் உடல் நிலை மோசமாவதை தடுக்க இது உதவுகிறது என்கிறார் தில்லி முதல்வர் கேஜரிவால் ( Arvind Kejriwal).


ப்ளாஸ்மா சிகிச்சை (Plasma Therapy) என்பது குணமடைந்த நோயாளியின் இரத்தத்திலிருந்து  எடுக்கப்பட்ட ஆன்டிபாடிகளைப் பயன்படுத்தி,  சிகிச்சை அளிப்பது ஆகும். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயெதிரிப்பு சக்தியை வழங்க இந்த சிகிச்சை உதவியாக இருக்கும். ஏனெனில் இந்த வைரஸிலிருந்து ஒருவரின் இரத்தத்தில் வைரஸை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகள் இருக்கும்.


ALSO READ | 1 கோடியே 25 லட்சம் வேலை வாய்ப்பை அளிக்கும் UP வேலைவாய்ப்பு திட்டத்தை அறித்த PM Modi


குணமான ஒருவரின் இரத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆண்டி பாடிகளை, நோய் தொற்று உள்ள ஒருவருக்கு செலுத்தும் போது, அவை கொரோனா வைரஸ் கிருமியை அடையாளம் கண்டு,  அதை எதிர்த்து போராட உதவுகிறது.


தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு, அவருக்கு தனியார் மருத்துவமனையில் ப்ளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு முன்னேற்றம் தெரிகிறது.