கொரோனா தடுப்பூசியை அனைத்து காவல் துறையினருக்கும் வழங்க தில்லி காவல்துறை சிறப்பு திட்டத்தை தயார் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்.எம்.எஸ் மூலம் கோவிட் -19 தடுப்பூசி தகவல் வழங்கும் திட்டத்தின் கீழ் தில்லி காவல்துறை தனது பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் தேதி மற்றும் நேரம் குறித்த தகவலை தெரிவிக்கும்.


கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பிறகு, ​​ அதை முதலில் சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், முதியவர்கள் ஆகியோருக்கு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை அனைத்து போலீஸ்காரர்களுக்கும் வழங்க டெல்லி காவல்துறை (Delhi Police) சிறப்பு திட்டத்தை தயார் செய்துள்ளது.


எஸ்.எம்.எஸ் மூலம் COVID -19 தடுப்பூசி பிரச்சாரத்தின் கீழ் தில்லி காவல்துறை தனது பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்ட தேதி மற்றும் நேரம் குறித்து தெரிவிக்கும். இந்த திட்டம் குறித்து காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை இந்த தகவலை வழங்கினர். சிறப்பு போலீஸ் கமிஷனர் (நடவடிக்கை மற்றும் உரிமம்) டாக்டர் முக்தேஷ் சந்தர் இதற்கான உத்தரவை பிறப்பித்து தகவல்களை வழங்கினார்.


ALSO READ | உடல் தகனத்திற்கு பசு வரட்டியை பயன்படுத்த தெற்கு தில்லி மாநகராட்சி ஒப்புதல்


 


டெல்லி காவல்துறை பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து காவல்துறையினருக்கும் அவர்களின் மொபைல் போன்களுக்கு SMS மூலம் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போடப்பட உள்ள தேதி, நேரம் மற்றும் இடம் குறித்து தகவல் தெரிவிக்கப்படும். இதற்காக, 'பி.ஐ.எஸ்' அமைப்பில் உள்ள அனைத்து காவல்துறையினரின் மொபைல் எண்களையும் புதுப்பிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இருந்து எந்தவொரு காவல் துறையினரும் விட்டு போகாமல் இருப்பதை உறுதி செய்ய, அனைத்து மாவட்ட மற்றும் பிரிவுத் அதிகாரிகள், 2021 ஜனவரி 3 ஆம் தேதிக்குள் பணியாளர்களின் மொபைல் எண்களை புதுப்பிக்கும்  பணியை முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 


முன்னதாக, சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்வர்தன் (Dr. Harsh Vardhan) ஜனவரிமாதம்  ஏதேனும் ஒரு வாரத்தில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார். 


COVID-19 தடுப்பூசி வழங்குவது குறித்து அரசாங்கம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை, இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்றும் சுகாதார அமைச்சர் கூறினார். முதலில் தடுப்பூசி வழங்கப்படும் 30 கோடி மக்களில், 1 கோடி சுகாதார ஊழியர்கள், 2 கோடி களத்தில் உள்ள தொழிலாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட 26 கோடி மக்கள் மற்றும் 50 வயதிற்கு உட்பட்டவர்களில், தடுப்பூசி மிகவும் தேவைப்படும், பிற நோய்கள் உள்ள சுமார் ஒரு கோடி மக்கள் ஆகியோர் அடங்குவர் என்று அவர் மேலும் கூறினார்.


ALSO READ | Republic Day Parade பங்கேற்க தில்லி வந்திருக்கும் 150 ராணுவத்தினருக்கு Covid +ve 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR