Republic Day Parade பங்கேற்க தில்லி வந்திருக்கும் 150 ராணுவத்தினருக்கு Covid +ve

ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் இந்திய குடியரசு தின அணிவகுப்பில் கலந்துக் கொள்வதற்காக பலர் தலைநகர் டெல்லிக்கு வந்திருக்கின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 26, 2020, 11:07 PM IST
  • குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக கடந்த சில வாரங்களில் பல்வேறு இடங்களிலிருந்து ராணுவ வீரர்கள் டெல்லிக்கு வந்திருக்கின்றனர்.
  • கன்டோன்மென்ட் பகுதியில் உருவாக்கப்பட்ட 'safe bubble' பிரிவில் ஏராளமான முகாம்கள் உள்ளன.
  • குடியரசு தின விழா அணிவகுப்புகளில் கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் COVID-19 பரிசோதனை கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது.
Republic Day Parade பங்கேற்க தில்லி வந்திருக்கும் 150 ராணுவத்தினருக்கு Covid +ve  title=

ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் இந்திய குடியரசு தின அணிவகுப்பில் கலந்துக் கொள்வதற்காக பலர் தலைநகர் டெல்லிக்கு வந்திருக்கின்றனர். அதில்
குடியரசு தின அணிவகுப்பு மற்றும் ராணுவ தினத்தில் பங்கேற்க வந்திருக்கும் ராணுவ வீரர்களும் அடக்கம். 

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக கடந்த சில வாரங்களில் பல்வேறு இடங்களிலிருந்து ராணுவ வீரர்கள் டெல்லிக்கு வந்திருக்கின்றனர். அவர்கள் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் சுமார் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

குடியரசு தின விழா தொடர்பான இரண்டு அணிவகுப்புகளில் கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் COVID-19 பரிசோதனை கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. அதன்படி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது 150 ராணுவ வீரர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. குடியரசு தின அணிவகுப்பு மற்றும் ராணுவ தினத்தில் கலந்துக் கொள்ளும்  அனைவரையும் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட கடுமையான நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.  

குடியரசு தினம் (Republic day) மற்றும் ராணுவ தின அணிவகுப்பிலும் கலந்துக் கொள்பவர்கள் பயிற்சி செய்வதற்காக நவம்பர் பிற்பகுதியில் இருந்து 2,000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பல்வேறு போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தி டெல்லிக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 'safe bubble'இல் அனுப்பப்படுவதற்கு முன்பு அவர்கள் அனைவரும் கோவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருந்தது. 

ALSO READ | நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை தொடர்ந்தால் Bullet Train திட்டம் என்னவாகும்? 

கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிக்கப்பட்டவர்கள் அணிவகுப்பில் கலந்துக் கொள்ளும் மற்றவர்களுக்கு தொற்றை பரப்பும் அபாயம் இருக்கிறது. எனவே கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரிந்தவர்களை 'safe bubble' பிரிவில் வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

கன்டோன்மென்ட் பகுதியில் உருவாக்கப்பட்ட 'safe bubble' பிரிவில் ஏராளமான முகாம்கள் உள்ளன. அங்கு தங்குபவர்கள், ஜனவரி 26 அன்று குடியரசு தின கொண்டாட்டங்கள் முடியும் வரை வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.  

ராணுவ தினம் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

"குடியரசு தினம் மற்றும் ராணுவ தின அணிவகுப்புகளில் பங்கேற்பவர்களுக்கு மிகவும் கண்டிப்பான COVID-19 வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றுகிறோம். கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு படையினரை பாதுகாக்கும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு 'safe bubble' பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது" என்று ஒரு அதிகாரி கூறுகிறார்.

லடாக் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள  சில பகுதிகளில் இந்திய ராணுவம் 'safe bubble' பிரிவுகளை அமைத்துள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு மற்றும் ராணுவ தினத்தில் பங்கேற்க வந்திருக்கும் ராணுவ வீரர்களில், நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை தொடர்ந்தால் Bullet Train திட்டம் என்னவாகும்? 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News