டெங்குக் காய்ச்சல் சிகிச்சைகள்! இந்த அறிகுறி இருந்தால் எச்சரிக்கை அவசியம்
DENGUE AWARNESS: டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளையும், டெங்குவிற்கான சிகிச்சை என்ன என்பதையும் தெரிந்துக் கொள்வோம்
மழைக்காலம் அதிமாகியிருப்பதால் டெங்கு காய்ச்சல் உட்பட பலவிதமான நோய்கள் அதிகரிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. தற்போது பலரும், சளி மற்றும் காய்ச்சல் என பருவநிலை மாறுதலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பலருக்கும் அச்சம் ஏற்படுகிறது.
டெங்கு காய்ச்சல் என்பது அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. காய்ச்சல் வந்தால், அதிலும் பல அறிகுறிகள் காணப்படும். டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளையும், டெங்குவிற்கான சிகிச்சை என்ன என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.
டெங்குவை ஏற்படுத்தும் வைரஸ்களில் மொத்தம் 4 வகைகள் உள்ளன. காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வயிற்று வலி, எலும்பில் வலி, வாந்தி, ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும்.
மேலும் படிக்க | முதுகுவலிக்கு முதலை ட்ரீட்மெண்ட்! இது சீன மருத்துவம்
காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். வந்திருப்பது டெங்கு காய்ச்சலா அல்லது வேறு வகை காய்ச்சலா என்பதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.
பொதுவாக ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவே, ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை உட்பட பல பரிசோதனைகளை செய்து எதுபோன்ற சிகிச்சை அளிப்பது என்பதை மருத்துவர் தான் முடிவு செய்ய முடியும்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை
டெங்கு காய்ச்சலுக்கு என பிரத்யேக சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டமால் மாத்திரையும், உடல் வலிக்கு, சில மாத்திரைகளையும் டாக்டர் பரிந்துரைப்பார். ஆனால், வெகு சிலருக்கு டெங்கு ஷாக் சிண்ட்ரோம் என்பது போன்ற தீவிர நிலை ஏற்படும். அதேபோல ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும்போது, நரம்பு மூலமாக தட்டணுக்கள் கொண்ட ரத்தம் செலுத்துவார்கள்.
டெங்குக் காய்ச்சல் வந்தவர்கள், தங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். டெங்குக் காய்ச்சல் ஏற்படுவதால், உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், நீண்ட நாட்கள் உடலில் சோர்வு இருக்கலாம். ஆனால், சிலருக்கு, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, நுரையீரல் கூடு பகுதியில் நீர் தேங்கிவிடும். அந்த நிலையை, டெங்கு ஷாக் சிண்ட்ரோம் என்று சொல்கின்றனர். இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
டெங்கு காய்ச்சல் வந்து குணமாகிவிட்ட ஒருவருக்கு மீண்டும் அதே காய்ச்சல் பாதிப்பு ஏற்படலாம். ஆனால், ஏற்கெனவே வந்த வைரஸ் பாதிப்பு மீண்டும் வராது. டெங்குவை ஏற்படுத்தும் வைரஸ் நான்கு வகைப்படும். ஒருமுறை பாதித்த வைரஸால், மீண்டும் பாதிப்பு ஏற்படாது.
மேலும் படிக்க | சர்க்கரை நோயை உண்டு இல்லேன்னு ஆக்கும் கிச்சன் கில்லாடி! இது வெங்காயத்தின் மாயஜாலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ