நீரிழிவு நோயில் வெள்ளை உணவுகளைத் தவிர்க்கவும்: நீரிழிவு நோய் உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. உலக அளவில் ஐந்தில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் மோசமான வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு ஆகியவற்றால் ஏற்படுகிறது. ஒருவருக்கு இந்த நோய் வந்தால், அதற்கு முடிவு என்பது இல்லை. இதுதான் இதில் உள்ள மிகப் பெரிய சவாலாகும். இருப்பினும், இந்த நோயை கண்டிப்பாக மருந்துகள் மற்றும் உணவுமுறை மூலம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உகலில் பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். சமீப காலங்களில் இந்த நோயால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நோயில் இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பு காரணமாக, உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த நோயில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இது நரம்புகள் உட்பட உடலின் பல்வேறு பாகங்களை பாதிக்கிறது. எனினும், நாம் உட்கொள்ளும் உணவில் சில கட்டுப்பாடுகளை மேற்கொண்டால், சிலவற்றை தவிர்த்தால், இந்த நொயை கட்டுக்குள் வைக்கலாம். 


அப்படி நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய 3 வெள்ளை பொருட்களை பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றை நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம், குறைக்கவாவது வேண்டும். 


சர்க்கரை


நீரிழிவு நோயில் வெள்ளை உணவுகளில், சர்க்கரை மிகவும் அபாயகரமானதாக கருதப்படுகின்றது.  பால், டீ உள்ளிட்ட அனைத்திலும் சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் அதன் சுவை பன்மடங்கு அதிகரிக்கிறது. இருப்பினும், நீங்கள் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல், சர்க்கரை நிறைந்த பொருட்களை மட்டுமே சாப்பிட்டால், அது உங்கள் உடலில் நீரிழிவு நோயை உண்டாக்கும். ஏற்கனவே நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.


மேலும் படிக்க | Constipation: கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்


மைதா மாவு


மைதா மாவு கோதுமை மாவை சுத்திகரிப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. கோதுமை மாவை அரைத்து சலிக்கும் போது, ​​நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, தாது வைட்டமின்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் பிரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, அதன் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அது இழந்துவிடுகிறது. இதை உட்கொண்டால் உடலில் ட்ரைகிளிசரைடு அபாயம் அதிகரிக்கிறது. மைதா மாவை அடிக்கடி உட்கொண்டால். டைப் 2 நீரிழிவு நோய்க்கான அபாயமும் அதிகரிக்கிறது.


உப்பு


உணவில் உப்பு இருப்பதால் அதன் சுவை அதிகரிக்கிறது. உப்பின் மூலம், குளோரைடு மற்றும் சோடியம் உடலில் போதுமான அளவில் சப்ளை செய்யப்படுகிறது. இருப்பினும், நீங்கள் அதிகப்படியான உப்பு சாப்பிட்டால் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால், எலும்புகள் வலுவிழந்து, உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து, சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Heart Attack Risk: இளம் வயதினருக்கு வரும் மாரடைப்பு..! தடுக்க சில வழிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ