Constipation: கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்

Pregnant Women Constipation Problems: கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. அதேபோல், கருவுறுவதற்கும் மலச்சிக்கலுக்குமான தொடர்பு இருப்பதையும் தெரிந்துக் கொள்ளலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 10, 2023, 09:15 AM IST
  • மலச்சிக்கலால் அதிகம் பிரச்சனை ஏற்படுவது யாருக்கு?
  • கர்பிணிகளுக்கு ஏன் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது?
  • கருவுறுவதற்கும் மலச்சிக்கலுக்குமான தொடர்பு
Constipation: கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்  title=

Pregnancy Constipation: ஒரு பெண் கருவுறும்போது, பல்வேறு உடல் மாற்றங்களுக்கு உட்படுகிறார், ஆனால், மலச்சிக்கலால் பாதிக்கப்படுவதும் கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் பிரச்சனையாக இருக்கிறது. அது பலருக்கு மிகப்பெரிய சிக்கலாகவே மாறுகிறது. கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் ஆகும். கருவுறும் பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது. ஆனால், அந்த மாற்றங்களில், கொஞ்சம் சிக்கலானது மலச்சிக்கல்.

உடல் மாற்றங்கள்

ஒரு பெண்ணின் உடலில் மாற்றம் ஏற்படுவது, அவர்களின் செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் குடல் இயக்கம் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதுசரி, ஆனால், கர்பிணிகலுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானவை இவை.

ஹார்மோன் மாற்றங்கள்
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் சாதாரண அளவை விட புரோஜெஸ்ட்டிரோன் அதிகமாக சுரக்கிறது. 

மேலும் படிக்க | எச்சரிக்கை! பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாமே ! 
 
ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல் அதிகரிப்பு
கர்பிணிகளுக்கு கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் தேவைப்படுவதால், அதற்கான உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, அதிக அளவிலான இந்த ஊட்டச்சத்துக்கள் மலச்சிக்கல் அபாயத்தை அதிகப்படுத்துகிறது
 
நீர் உறிஞ்சுதல் அதிகரிஅப்பு
ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும் போது, அவர்களின் உடல் இயல்பை விட வேகமாக தண்ணீரை உறிஞ்சுகிறது. இதனால், மலச்சிக்கல் ஏறபடும் அபாயம் அதிகரிக்கிறது.  இதைத் தவிர்க்க கர்ப்பிணிப் பெண்கள், அடிக்கடி நீர் மற்றும் பானங்களை அருந்த வேண்டு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.  

மேலும் படிக்க | ஒரு மாதம் சர்க்கரைக்கு 'நோ' சொல்லுங்க... உங்க உடம்பு எப்படி மாறுது பாருங்க!

செயல்பாடு குறைவு
கர்ப்பிணிப் பெண்கள் சுறுசுறுப்பாக இயங்குவதில்லை என்பது இயல்பானது. ஆனால், அதன் பக்க விளைவுகளில் ஒன்றாக மலச்சிக்கல் ஏற்படுகிறது.
 
கருப்பை விரிவாக்கம்
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, கரு வளரும்போது, அதற்கான இடம் அதிகம் தேவைப்படுகிறது. கரு வளர வளர, குழந்தைக்கான இடத்தை உருவாக்க அவர்களின் கருப்பை விரிவடைகிறது. இது குடல் இயக்கத்தை மெதுவாக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மலச்சிக்கலால் பிரச்சனையா? இந்த பழம் சாப்பிடுங்க, நிவாரணம் கிடைக்கும்

மேலும் படிக்க | Heart Attack Risk: இளம் வயதினருக்கு வரும் மாரடைப்பு..! தடுக்க சில வழிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News