நீரிழிவு நோயாளிகள் மஞ்சள் உட்கொள்ளலாமா? இதனால் பலன் கிடைக்குமா?
Turmeric for Diabetes: நீரிழிவு நோயாளிகள் மஞ்சள் உட்கொள்ளலாமா? இதனால் சாதகமா பாதகமா? விரிவாக காணலாம்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் பல நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சமையலறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சளைப் பயன்படுத்தினால், குளுக்கோஸ் அளவு அப்படியே இருக்கும். மஞ்சள் மற்றும் சர்க்கரை நோய் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் நன்மை பயக்கும்
மஞ்சள் என்பது பல காய்கறிகள் மற்றும் உணவுகளை சமைக்கும்போது பயன்படுத்தப்படும் ஒரு மசாலா ஆகும். ஆனால் மஞ்சள் நுகர்வு நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும் என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
மஞ்சள் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கும்
நமது ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது. மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், உயரும் குளுக்கோஸைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும். இதற்கு மஞ்சளை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
மேலும், மஞ்சளை பாலில் கலந்து குடித்து வந்தால், அது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது தவிர, காலை உணவில் பால், மஞ்சள், கருமிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.
மூட்டு வலியைப் போக்க மஞ்சள்
இரத்தப்போக்கை நிறுத்தவும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. காயம் ஏற்பட்டால், இந்த மசாலாவை பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். இது தவிர, மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறவும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.
மஞ்சள் யூரிக் அமிலத்திலும் பயனுள்ளதாக இருக்கும்
சளி, இருமல் பிரச்சனை இருந்தால், கண்டிப்பாக மஞ்சள் பால் அருந்தினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் பாலில் கலந்து குடிக்க வேண்டும்.
மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இது பல வகையான தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மஞ்சள் நமது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது பிற ஆரோக்கிய பிரச்சனைகளிலிருந்தும் விடுபட உதவுகிறது.
மேலும் படிக்க | மன அழுத்தம் 'மூளைக்கு' நல்லது! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ