நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சளின் நன்மைகள்: மஞ்சள் ஒவ்வொரு வீட்டிலும் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒரு மூலிகை மசாலா பொருளாகும். இது நமது உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பார்கள். அதேபோல் இந்த மஞ்சள் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இது மட்டுமின்றி, மஞ்சள் மசாலா பொருளானது சர்க்கரை நோய்க்கும் நல்லது என்று கருதப்படுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக மஞ்சளை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் மஞ்சளை எப்படி உட்கொள்ளலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
நீரிழிவு அல்லது சர்க்கரை நோயாளிகளுக்கு மஞ்சள் எவ்வாறு பயன் தரும்
நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மஞ்சளில் நல்ல அளவு குர்குமின் உள்ளது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் மிகவும் பயமின் தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி நீரிழிவு நோயில் மஞ்சளை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | விந்தணு குறையாமல் இருக்க இந்த உணவுகளை தவிர்க்கவும்
நீரிழிவு அல்லது சர்க்கரை நோயாளிகள் இந்த மூன்று முறைகளில் மஞ்சளை உட்கொள்ளலாம்-
மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை: நீரிழிவு நோயாளிகள் மஞ்சளுடன் இலவங்கப்பட்டையை உட்கொள்ளலாம். இதை உட்கொள்ள, ஒரு கிளாஸ் பாலில் மஞ்சள், இலவங்கப்பட்டை தூள் கலந்து சூடாக்கவும். காலை உணவில் இந்த பாலை உட்கொள்ளலாம். மஞ்சளுடன், இலவங்கப்பட்டை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு: கருமிளகுடன் மஞ்சள் சேர்த்து உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். நீரிழிவு நோயாளிகள் மஞ்சள் கருப்பு மிளகை மற்றும் பாலுடன் கலந்து குடிக்கலாம். இதற்கு ஒரு கிளாஸ் பாலில் மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்த்து கலக்கவும், இப்போது அதை சூடுபடுத்தி குடிக்கவும்.
மஞ்சள் மற்றும் நெல்லிக்காய்: நீரிழிவு நோயாளிகளுக்கும் மஞ்சள் மற்றும் நெல்லிக்காய் சேர்த்து சாப்பிட்டால் நன்மை பயக்கும். நெல்லிக்காயில் நல்ல அளவு வைட்டமின் சி உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதற்கு நெல்லிக்காய் பொடி மற்றும் மஞ்சளை கலந்து தண்ணீர் சேர்த்து பருகலாம். இந்த கலவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR