சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாமா: குளிர்காலத்தில், நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து நிறைந்த காய்கள், பழங்கள் மற்றும் பிற உணவுப்பொருட்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. எனினும், நீரிழிவு நோயாளிகளுக்கு எதை சாப்பிடுவது, எதை தவிர்ப்பது என்ற தயக்கம் எப்போதும் இருக்கும். ஏனெனில் உண்ணும் உணவில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டால் கூட, அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். இது அவர்களது ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளிர்காலத்தில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு நன்றாக கிடைக்கிறது. அனைவரும் இதை வாங்கி பல வழிகளில் சாப்பிடுவதுண்டு. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உட்கொள்ளலாமா? இது குறித்து, கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் ஆயுஷி யாதவிடம் பேசினோம். அவரது கருத்துகளை இந்த பதிவில் காணலாம்.


சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்


- வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆரோக்கியமான கொழுப்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கரோட்டினாய்டுகள் மற்றும் தியாமின் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ளன.


- இது அனைத்து வகையிலும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 


எனினும் இதன் சுவை இனிப்பாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட அச்சப்படுகிறார்கள். 


மேலும் படிக்க | அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா? 


சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாமா? 


ஒரு உணவை சமைக்கும் முறை அதன் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருக்குமா அல்லது அதிகமாக இருக்குமா என்பதை தீர்மானிக்கும் என உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் கூறுகிறார். உயர் ஜிஐ உள்ள அனைத்து பொருட்களும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால், பலர் அதை சாப்பிட பயப்படுகிறார்கள்.


சர்க்கரை வள்ளிக்கிழங்கை எப்படி சாப்பிட வேண்டும்?


சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக நார்ச்சத்து மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் இதை தோலுடன் வேவைத்து சாப்பிட்டால், அது நீரிழிவு நோயில் நன்மை பயக்கும். மேலும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது.


சர்க்கரை வள்ளிக்கிழங்கை இப்படி சாப்பிட வேண்டாம்


சிலர் சர்க்கரை வள்ளிக்கிழங்கை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவார்கள். இது சரியான முறையல்ல, அது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யும். ஆகையால் இந்த முறை நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது. 


ஆகையால் நீரிழிவு நோயாளிகள் வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவதே நல்லது. வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை இதை சாப்பிடலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஒல்லியாக இருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..! இந்த 5 பிரச்சனைகள் பாதிக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ