காலையில் இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம்
Diabetes Symptoms: நீரிழிவு நோய் ஏற்பட்டால் நம் உடல் காலை வேளைகளில் பல சமிக்ஞைகளை அளிக்கிறது. இந்த அறிகுறிகள் இரத்த சர்க்கரையின் அதிகரிப்புடன் தொடர்புடையவை என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
Diabetes Symptoms: நீரிழிவு என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் வரும் ஒரு நோயாகும். இது மெதுவாக உடலில் பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றது. ஏனெனில் நீரிழிவு நோய் மெதுவாக கிட்டத்தட்ட அனைத்து முக்கிய உறுப்புகளையும் அழிக்கிறது. இதில் முக்கியமாக இதயம், மூளை, சிறுநீரகம், கல்லீரல், கண்கள் ஆகியவை அடங்கும். இதனுடன், நீரிழிவு உடலின் அனைத்து செயல்பாடுகளையும் பாதிக்கிறது.
நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்துகொள்வதால், நீரிழிவு அபாயத்தை முன்கூட்டியே நிறுத்தலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் சில நேரங்களில் இந்த அறிகுறிகள் மிகவும் நுட்பமானவையாக இருப்பதால், அவற்றைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம். நீரிழிவு நோய் ஏற்பட்டால் நம் உடல் காலை வேளைகளில் பல சமிக்ஞைகளை அளிக்கிறது. இந்த அறிகுறிகள் இரத்த சர்க்கரையின் அதிகரிப்புடன் தொடர்புடையவை என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. சர்க்கரை நோயின் இந்த அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
உலர்ந்த வாய்
வாய் வறண்டுபோவது நீரிழிவு நோயின் மிகவும் பொதுவான காலை அறிகுறியாகும். காலையில் எழுந்தவுடன் அடிக்கடி வாய் வறட்சி அல்லது அதிக தாகம் ஏற்பட்டால், உயர் இரத்த சர்க்கரை அளவுகள் காரணமாக இருக்கலாம். இப்படி இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். வாய் உலர்ந்துபோகும் அறிகுறி இருந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள், சரியான நேரத்தில் மருத்துவரை அணுகவும்.
மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு! நீரிழிவு மேலாண்மைக்கு உகந்த பழங்கள்!
குமட்டல்
காலை வேளைகளில் குமட்டல் உணர்வு இருப்பது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் அதைப் பற்றிய மற்றொரு புதிரான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான நேரங்களில் குமட்டல் பொதுவாக பலவீனம் காரணமாகவும் ஏற்படலாம். ஆனால் தினமும் காலையில் எழுந்தவுடன் குமட்டல் ஏற்பட்டால், அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே இந்தப் பிரச்சனை தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். சர்க்கரை நோய் உள்ளதா என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.
மங்கலான பார்வை
நீரிழிவு கண்களில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றது. காலை வேளைகளில் தெளிவாகப் பார்ப்பதில் சிக்கல் இருந்தால், அது உயர் இரத்த சர்க்கரை அளவின் அறிகுறியாக இருக்கலாம். நீரிழிவு நோயினால் லென்ஸ் பெரிதாகி, பார்வை மங்கலாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், இந்த அறிகுறிகள் தோன்றியவுடன் உங்கள் இரத்த சர்க்கரையை பரிசோதிப்பது நன்மை பயக்கும். புறக்கணிக்கப்பட்டால், அவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
கால்களில் உணர்வின்மை
உயர் இரத்த சர்க்கரை அளவு நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், உடலின் சில பகுதிகளில் உணர்வின்மை ஏற்படலாம். நீரிழிவு நரம்பியல் பொதுவாக பாதங்கள் மற்றும் கால்களின் நரம்புகளை பாதிக்கிறது. இது கூச்ச உணர்வு மற்றும் வலி முதல் கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை என பல அறிகுறிகளை ஏற்படுத்தும். இவற்றை நீங்கள் உணர்ந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள், சரியான நேரத்தில் மருத்துவரை அணுகவும். உடனடியாக சிகிச்சையைத் தொடங்க தயங்க வேண்டாம்.
களைப்பாக இருப்பது
சோர்வு என்பது நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறியாகும். இன்சுலின் உற்பத்தி குறைவாலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதாலும் உடல் மந்தமாகிறது. சோர்வு ஒரு பொதுவான பிரச்சனை. அது அதிக வேலை, மன அழுத்தம் ஆகியவற்றால் ஏற்படுகிறது. அதனால் பெரிய பிரச்சனை இல்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் இங்குதான் நாம் ஏமாற்றப்பட்டு புறக்கணித்து விடுகிறோம். சில சமயங்களில் இது நீரிழிவு நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், உடல் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்: டயட் பிளான் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ