Diabetes: நீரிழிவு நோயால் கைகளில் வலியா? இப்படி நிவாரணம் பெறலாம்
Diabetes Patients: நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை கைகளில் வரும் வலியாகும். இதிலிருந்து நிவாரணம் பெற சில எளிய வழிகளை காணலாம்.
நீரிழிவு நோயாளிகள் கை வலியை எவ்வாறு குணப்படுத்துவது: நீரிழிவு நோய் குணப்படுத்த முடியாத ஒரு நோயாகும். ஆகையால், இந்த நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியமாகும். உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்காவிட்டால், பல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளுக்கு எலும்புகளின் வலிமையில் பாதிப்பு ஏற்படுவதால், கைகளில் வலி இருப்பதை பார்க்கிறோம். கைகளில் அடிக்கடி வலி ஏற்படும் நீரிழிவு நோயாளிகள் சில எளிதான வழிகளைக் கடைப்பிடித்து இதற்கு நிவாரணம் காணலாம். நீரிழிவு நோயாளிக்கு கைகளில் வலி இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
நீரிழிவு நோயாளிகள் இந்த வழியில் கை வலிக்கு நிவாரணம் காணலாம்:
ஸ்ட்ரெட்ச் செய்யவும் (கைகளை முடிந்த வரை நீட்டி மடக்கவும்)
நீரிழிவு நோயால், உங்கள் கைகளில் தொடர்ந்து வலி இருந்தால், அவ்வப்போது கையை நன்றாக ஸ்ட்ரெட்ச் செய்வது அதாவது நீட்டுவது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் தசைகளை தொனிக்கவும் உதவுகிறது. ஸ்ட்ரெட்ச் செய்வது கால் வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கும்.
மேலும் படிக்க | Alcohol Drinking Age: இந்த வயதினர் மது அருந்தவே கூடாதாம்! எச்சரிக்கும் ஆய்வு
குளிர்ச்சி சிகிச்சை
நீரிழிவு நோயால் கைகளில் வலி இருந்தால், நீங்கள் குளிர் சிகிச்சையின் உதவியை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஐஸ் கட்டிகளை காட்டன் துணியில் கட்டி பத்து நிமிடம் முதல் 15 நிமிடம் வரை ஒத்தடம் கொடுக்கவும். இதனால் வீக்கத்திலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்க்கவும்
கைகள் மற்றும் கால்களில் வலி பிரச்சனையை குறைக்க, ஆரோக்கியமான உணவை தேர்வு செய்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இதனுடன், நீரிழிவு நோயாளிகள் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஏரோபிக் உடற்பயிற்சி செய்யுங்கள்:
மூட்டு வலிக்கு ஏரோபிக்ஸ் பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீரிழிவு நோயால் உங்கள் கைகளில் வலி இருந்தால், நிச்சயமாக உங்கள் தினசரி வழக்கத்தில் ஏரோபிக் உடற்பயிற்சியைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த பயிற்சிகளை செய்யத் தொடங்கி சில நாட்களிலேயே உங்களுக்கு நல்ல நிவாரணம் தெரியும்.
மெலும் படிக்க | Weight Loss Mistakes: எடை குறைப்பதில் நாம் செய்யும் தவறுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ