சர்க்கரை அளவை கட்டுப்படுத்தணுமா? இந்த மசாலா பொருள் மூலம் சுலபமா செய்யலாம்

Diabetes Control Tips: நம் வீட்டு சமையலறைகளில் இருக்கும் இந்த பொருள் நீரிழிவு நோய்க்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என பலருக்கு தெரிந்திருக்க வாப்பில்லை. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 7, 2022, 12:48 PM IST
  • நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கையில் இன்சுலின் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
  • நீரிழிவு நோய் ஏற்பட்டால், அதன் காரணமாக இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது.
  • உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தணுமா? இந்த மசாலா பொருள் மூலம் சுலபமா செய்யலாம் title=

நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் கிராம்பு: நீரிழிவு நோய்க்கு மரபணு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எனினும், நமது வாழ்க்கை முறையும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களும் இதற்கான பிற முக்கிய காரணங்களாக உள்ளன. சமீப காலமாக உலக அளவில் அதிக அளவிலான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றன. நீரிழிவு நோய் காரணமாக இன்னும் பல நோய்கள் ஏற்படும் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். 

நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கையில் இன்சுலின் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு ஹார்மோன் ஆகும்.  இதன் உதவியுடன் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது.  நீரிழிவு நோய் ஏற்பட்டால், அதன் காரணமாக இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது.

உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். நமது சமையலறையில் இருக்கும் ஒரு பொருளின் பயன்பாடு நமது இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த பெரிய அளவில் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | இந்த 5 உணவு பொருட்கள் உடலில் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது! 

கிராம்பு சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் வழக்கமான உணவில் கிராம்பை சேர்த்துக்கொள்ள வேண்டும். மசாலா பொருளான கிராம்பு பொதுவாக உணவின் சுவையை அதிகரிக்கப் பயன்படுகிறது. ஆனால், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் பயன்படும் என்பது சிலருக்குத்தான் தெரிந்திருக்கும். 

கிராம்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக பார்க்கபப்டுகின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு கிராம்பின் பயன்பாட்டை பற்றி இந்த பதிவில் காணலாம். 

நீரிழிவு நோயாளிகளுக்கு கிராம்பு ஏன் பயனுள்ளதாக இருக்கிறது?

கிராம்பில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதன் காரணமாக கிராம்பு எண்ணெயை உட்கொள்வது இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் ரெஸ்பான்ஸ் மெகானிசம் அதிகரிக்கிறது. கிராம்பில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் கணையத்தின் பணியை மேம்படுத்த உதவுகிறது. கணையம் என்பது நம் உடலில் இன்சுலின் உற்பத்தி செய்யப்படும் மிக முக்கியமான பகுதியாகும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தினமும் கிராம்பு சாப்பிடுவதால், சர்க்கரை அளவைப் பராமரிப்பதில் அவர்களுக்கு மிகப்பெரிய உதவி கிடைக்கும். 

சர்க்கரை நோயாளிகள் கிராம்பை எப்படி பயன்படுத்துவது?

- ஒரு டீஸ்பூன் கிராம்பை நைசாக அரைக்கவும்.

- இந்தப் பொடியை ஒரு கப் தண்ணீரில் போட்டு சுமார் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

- கொதித்ததும் அரை டீஸ்பூன் டீ தூள் சேர்த்து சிறிது நேரம் அப்படியே விடவும்.

- இப்போது இந்த திரவத்தை வடிகட்டி, அது குளிர்ந்து போகும் வரை காத்திருக்கவும்

- பின், இந்த திரவத்தை குடிக்கலாம். 

இந்த வழியில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மட்டனா? சிக்கனா? நீரிழிவு நோயாளிகளுக்கு எது நல்லது? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News