பாதாம் உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்தை தரும் ஒரு இயற்கையான நட்ஸ் வகையாகும், ஆயுர்வேதத்தில் பாதாம் சிறந்ததொரு மருந்தாக கருதப்படுகிறது.  ஆயுர்வேதத்தின்படி வாதம், பித்தம் மற்றும் கபம்  ஆகியவை சமநிலையில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.  இவற்றை சமநிலையில் வைத்துக்கொள்ள பாதாம் உதவுகிறது.  பாதாமை ஊறவைத்து தோல் நீக்கியோ அல்லது அப்படியேயோ சாப்பிடலாம், பாதம் பருப்பின் சக்தியை முழுமையாக நீங்கள் பெற வேண்டுமாயின் அதனை தினமும் சாப்பிட வேண்டும்.  பாதாம் பருப்பு சாப்பிடுவது வீண் வாத மற்றும் பித்த தோஷங்களைப் போக்கும் என்று நம்பப்படுகிறது  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதாம் பருப்புகளை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவதன் மூலம்  உடல் பலவீனம், நீரிழிவு நோயின் சில சிக்கல்களைத் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.  ஆயுர்வேதத்தின் படி உடல் பருமன், ப்ரீடியாபயாட்டீஸ் மெட்டபாலிக் சிண்ட்ரோம் போன்ற மருத்துவக் கோளாறுகளுடன் தொடர்புடைய பிரமேஹா (நீரிழிவு) போன்றவற்றிலிருந்து பாதாம் நமது உடலை பாதுகாக்கிறது. ஆயுர்வேதத்தின் படி, தினமும் பாதாம் பருப்பை உட்கொள்வது, உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளிக்கும், சருமத்தின் நிறத்தை அதிகப்படுத்துகிறது மற்றும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.  பாதாம் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது மட்டுமல்ல, அவை முடிக்கும் உறுதியளிக்கிறது, இதனால் இளநரை மற்றும் முடி உதிர்தல் போன்றவை தடுக்கப்படுகிறது.



மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்


ஆயுர்வேதத்தின் அடிப்படையில் ஒருவருக்கு நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த நினைத்தாலோ அவர்கள் தினமும் பாதாம் சாப்பிட வேண்டும்.  தினம் பாதாம் பருப்பை சாப்பிடும்போது உங்கள் நினைவாற்றலும் அதிகரிக்கிறது.  பாதாம் சாப்பிடுவதன் மூலம் உங்கள் இனப்பெருக்க திசு மற்றும் அதன் செயல்பாட்டின் நேபாம் அதிகரிக்கும்.  அதேசமயம் உடல் எடையை படிப்படியாக அதிகரிக்க ஆரோக்கியமான வழிகளில் ஒன்று பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை தினமும் சாப்பிடுவது தான்.  ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தபட்சம் 4 முதல் 6 பாதாம் பருப்புகளை எடுத்துக்கொள்ளலாம், அதேசமயம் அதிகப்படியான அளவில் பாதாம் பருப்பை சாப்பிடக்கூடாது என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.


மேலும் படிக்க | அளவிற்கு மிஞ்சினால் புரோட்டீனும் ‘விஷமாகி’ விடும்; எச்சரிக்கும் நிபுணர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ